பேச்சு:நீத்தண்ணீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சோறு வடித்த தண்ணீர் என்பது கஞ்சி அல்லவா? கஞ்சியும், நீத்தண்ணீரும் வேறு வேறு அல்லவா? மீதமானச் சோற்றில், அச்சோறு கெடாமல் இருக்க, அச்சோறு முழுகும் அளவுக்கு நீரை உற்றுவர். அந்நீரால், அச்சோறு அடுத்த நாள் கெடாமல் இருக்கும். அடுத்த நாள் அச்சோற்றுக்கு மேலே இருக்கும் நீரை (சில நேரங்களில் அச்சோற்றை அந்நீரில் கரைத்தும்) உண்பர். இதனையே நீத்தண்ணீர்/நீராகாரம்(நீர்+ஆகாரம்) என்பதே நான் அறிந்தது ஆகும்.--த*உழவன் 02:14, 14 டிசம்பர் 2010 (UTC)

நீங்கள் சொல்வது தான் சரியென்று நினைக்கிறேன். - சிறுவயதில் கேட்டது/உண்டது. மாற்றி விடுகிறேன்.--Sodabottle 05:08, 14 டிசம்பர் 2010 (UTC)
தண்ணீர் ஊற்றப்பட்ட முந்தைய நாள் சோற்றை நீச்சோறு என்று எங்க ஊரில சொல்றாங்க. அந்த சோற்றை வெங்காயம், பச்சைமிளகாய் கடித்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும், தயிறும் கலந்து கொள்ளலாம். இந்த சோற்றை அரைத்து மாவாக்கி முறுக்கு வத்தல் செய்வார்கள். ஊற வைத்த அரிசியுடன் நீச்சோற்றை கலந்து அரைத்தால் ஆப்பம் நல்ல சுவையாக கிடைக்கும். -- மாகிர் 06:57, 14 டிசம்பர் 2010 (UTC)
மாகிர், இது பற்றி தமிழ் விக்கிப்பீடியாவிலும் எங்கோ ஓர் உரையாடல் உள்ளது. ஒருநாள் ஊறுவதால் சிறிது நொதிப்பு உண்டாகி புளிப்புச் சுவையும் இருக்கும். இந்த பழையதைப் பிழிந்த நீருக்கு நீத்தண்ணீர் என்பர் என நினைக்கின்றேன். --செல்வா 17:35, 14 டிசம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நீத்தண்ணீர்&oldid=902135" இருந்து மீள்விக்கப்பட்டது