உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2010/டிசம்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
« 2010/நவம்பர்

(Recycled நவம்பர்)

டிசம்பர்

(Recycled டிசம்பர்)

2011/சனவரி »

(Recycled சனவரி)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 1
அகத்தடியாள் (பெ)


பொருள்

 1. வீட்டுவேலைக் காரி.
 2. அணுக்கத் தொண்டு.
  அகத்தடிமை செய்யு மந்தணன் (தேவாரம். 614, 6).
 3. மனையாள்.

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. Maidservant of the house.
 2. Services of a devoted follower.

சொல்வளம்

அடியாள் - அடிமை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 2
கொசுறு (பெ)

பொருள்

 1. பேரத்தில் வாங்குவதை விடச் சற்று அதிகமாக, இலவசமாகக் கிடைக்கும் சிறு அளவு; பிசிர், பிசுக்கு; துணுக்கு

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. anything extra obtained from a seller or a shopkeeper as a bargain; extra, titbit


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 3
சில்லரை (பெ)

பொருள்

 1. சில் + அரைசில்லரை
 2. சிறிய மதிப்புள்ள நாணயம்; காசு
 3. வியாபாரத்தில் நுகர்வோருக்கு நேரடியான விற்பனை
 4. சொற்பம். அற்பம்

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
1)change,2) coin, 3)retail 4) trifle, insignificant

சொல்வளம்

ஒல் - ஒர் - அர்


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 4
உந்தி (பெ)
உந்தி

பொருள்

 1. தொப்புள்

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. navel ; bellybutton
 • இந்தி
 1. तोंदी

சொல்வளம்

நாபி - கொப்பூழ்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 5
தற்குறி (பெ)

பொருள்

 1. எழுதத் தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் கீறல்
 2. எழுதப்படிக்கத் தெரியாதவன்; படிக்காதவன்; படிப்பறிவற்றவன்

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. signature-mark of an illiterate person
 2. illiterate person
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 6
வாலுகம் (பெ)
வெண்மணல்

பொருள்

 1. மணல்
 2. வெண்மணல்
  வேலைவாலுகத்து விரிதிரைப் பரப்பின் (சிலப்பதிகாரம்.6, 131).

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. sand
 2. white sand

சொல்வளம்

மண், பணிலம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 7
மடங்கல் (பெ)
முழங்கும் சிங்கம்
மடங்கும் கம்பி

பொருள்

 1. சிங்கம்
  மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து (புறநானூறு)
  மடங் கலிற் சீறை மலைத்தெழுந்தார் (பு. வெ. 3, 24).
 2. மடங்குதல்
  மைந் துடை யொருவனு மடங்கலுநீ (பரிபாடல். 1, 44).

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. lion
 2. bending

சொல்வளம்

வளை - மடிப்பு - அரிமா
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 8
ஓதி (பெ),(வி)
கூந்தல்

பொருள்

 1. (பெ)கூந்தல்
  சிறுகுடிப் பாதிரி கமழும் ஓதி (புறநானூறு)
 2. (வி)மந்திரங்களைக் கூறிவிட்டு, ஓதுதலை முடித்து விட்டு

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. (பெ) hair, braid, plait
 2. (வி) after chanting

சொல்வளம்

ஒதி - கதி - மதி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 9
அளக்கர் (பெ)
உப்பளம்
சேறு
நீள்வழி

பொருள்

 1. கடல்
  அங்கண்மா ஞாலஞ் சூழு மளக்கர்(கந்தபுராணம். ஆற்று. 36).
  அளக்கர்த்திணை விளக்காகக் கனைஎரி பரப்ப (புறநானூறு)
 2. உப்பளம்
 3. சேறு
 4. பூமி
 5. நீள்வழி
 6. கார்த்திகை

மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. sea
 2. salt pans
 3. mud, mire
 4. Earth
 5. long road
 6. The third nakṣatra.(Astrological star)

சொல்வளம்

அள - அலம் - அளை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 10
கலிமா (பெ)
குதிரை

பொருள்

 1. குதிரை
  கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும் (புறநானூறு)

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. horse


சொல்வளம்

புரவி - வன்னி - பயணம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 11
long in the tooth உரிச்சொல்
 1. வயதான (மரபு வழக்கு).

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 12
, பெயர்ச்சொல்
 1. தமிழின் முதல் எழுத்து; தமிழ் உயிரெழுத்துகளில் முதல் உயிரெழுத்து
 2. பெயரெச்சவிகுதியாக-தன்வழி காளை (சீவக சிந்தாமணி-494).

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 13
ஐந்தாம் படை , பெயர்ச்சொல்
 • ஒற்றர் படை
 • fifth column ஆங்கிலம்
 • 1930களில் எசுப்பானிய உள்நாட்டுப் போரில் பாசிஸ்டுகளின் தளபதி ஜெனரல் மோலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சொல்..

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 14
நீத்தண்ணீர் ,பெயர்ச்சொல்
 1. நீராகாரம்; (நீத்தண்ணி என்பது பேச்சு வழக்கு).

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 15
பலாப்பழம் பெயர்ச்சொல்
 1. மரத்தில் விளையும் பழங்களிலேயே மிகப்பெரியது
 2. முக்கனிகளில் ஒன்று.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 16
வேங்கை பெ
 1. சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் ஒரு வெள்ளைப் புலிகள் இணை
  சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் ஒரு வெள்ளைப் புலிகள் இணை
  புலி என்றும் அழைக்கப்படுகிறது. இது வேட்டையாடி உண்ணும் விலங்கினம்.
 2. வேங்கை என்பது ஒரு வகை மரத்தையும் குறிக்கும். இதன் மஞ்சள் நிறப்பூக்கள் புலியின் தோல் நிறத்திற்கு ஒப்பிட்டு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. உதாரணம்: கலித்தொகை 38, குறுந்தொகை, 47.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 17
இசுரோ அஃகுப்பெயர், பெயர்ச்சொல்
 1. இந்திய விண்வெளி ஆய்வு மையம்
 2. Indian Space Research Organisation - என்பதின் சுருக்கம்.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 18
பூண்டு (பெ)
 1. இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட உணவுப்பண்டமாகும்.
 2. உள்ளிப்பூண்டு
 3. வெள்ளைப்பூண்டு
மொழிப்பெயர்ப்புகள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 19
திரிகடுகம் (பெ)


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 20
சுக்கு (பெ)
சுக்கு --- dried ginger
 1. காய்ந்த இஞ்சியே சுக்கு ஆகும்
 2. dried ginger (Zingiber officinale) ஆங்கிலம், # सोंठ இந்தி

--- என்பது தொன்று தொட்டு வழங்கும் பழமொழியாகும்.

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 21
மிளகு (பெ)
உலர்ந்த மிளகுகள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 22
திப்பிலி (பெ)
திப்பிலி
 1. திப்பிலி - குறுகிய, நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனம்
 2. தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி இவற்றுக்குத் திப்பிலி மருந்தாகப் பயன்படுகிறது


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 23
எண்ணம் (பெ)

எண்ணம் என்பது பன்பொருள் ஓர் மொழி ஆகும்.


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 24
கொல்லிமலை (பெ)
கொல்லிமலை அருவி
 1. கொல்லிமலையின் ஒரு பகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும், அதன் பெரும் பகுதி நாமக்கல் (முந்தைய சேலம்) மாவட்டத்திலும் உள்ளது.
 2. இங்குள்ள அறப்பளீசுவரர் கோவில், கொல்லிப்பாவை, கொல்லிமலைத் தேன், பெரியசாமி தீர்த்தம், ஆகாயகங்கை அருவி ஆகியவை மிகவும் புகழ் பெற்றவையாகும்.
 3. கொல்லி யாண்ட வல்வி லோரியும் (புறநானூறு. 158, 5).
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 25
கிறித்துமசு (பெ)
 1. இயேசுவின் பிறப்புவிழா.
1483 - 1725 - .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 26
ஆழிப்பேரலை பெயர்ச்சொல்
ஆழிப்பேரலை --- 2004 தாய்லாந்து (tsunami in Thailand)
 1. கடலடி நிலைநடுக்கம் அல்லது எரிமலை வெடிப்பு போன்றவை கடலில் ஏற்படும் போது கடலில்(ஆழி) ஏற்படும் பேரலை, கடற்கரையில் சேதம் விளைவிக்கக் கூடியது
 2. சுனாமி என்றும் அழைக்கப்படுகிறது.
 3. ஆங்கிலம் - tsunami
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 27
இராணித் தேனீ (பெ)
இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசையில் இராணித் தேனீ வளர்கின்றது
 • தேனீக்கள் கூட்டத்தின் தலைவி
 • queen beeஆங்கிலம்
 • இராணித் தேனீ உருவத்தில் பெரியது.
 • இதற்கு முட்டையிடுதலே பணி.
 • இராணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுவிற்குத் தொடர்ந்து 16 நாட்கள் இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசையை உணவாகக் கொடுத்தால் அவை இராணித் தேனீக்களாக வளர்கின்றன.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 28
வல்லாரை (பெ)
வல்லாரை
 1. ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரம்
 2. indian penny wort, Centella asiatica ஆங்கிலம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 29
கணினி (பெ)
கணினியின் மாதிரிப் படம்
 • கணித அடிப்படையில் இயங்கும் மின்னணு தொழில் நுட்பக் கருவி.
 • கணிப்பொறி, கணிப்பான், கணியம்.


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 30
மூக்கணாங்கயிறு (பெ)
மாடு ஒன்று மூக்கணாங்கயிற்றால் கட்டப்பட்டுள்ளது
 • எருது, காளை முதலியவற்றைக் கட்டுப்படுத்த அவற்றின் மூக்கைத் துளைத்துப் பூட்டும் கயிறு; மூக்காங்கயிறு
 • rope or string put through a bullock's nose as a curb; nose-string
 • மாட்டுக்கு மூக்கணாங்கயிறு, நாய்க்கு சங்கிலி, குதிரைக்குக் கடிவாளம், குருவிக்குக் கூண்டு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 31
கருப்பட்டி (பெ)
கருப்பட்டி - அடிப்புற தோற்றம்
 1. பனை வெல்லம்
 2. jaggery made from palmyra juice.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக