நுணுக்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நுணுக்கம் (பெ)
- நுண்மை
- கூர்மை
- கூரறிவு
- வேலைத்திறம். வேலை நுணுக்கம்
- பொருளடக்கம்
- யாழின் உள்ளோசை
- ஒரு கருத்தைக் குறிப்பினாலுணர்த்தும் அணி நுட்பம்
- உலோபம். அவன் கைநுணுக்கம் உள்ளவன்
- பொன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fineness, minuteness, meticulousness, nuance
- intricacy
- sharpness
- acuteness, acumen, subtlety
- exquisiteness, as of a work
- comprehensiveness
- vibrating note of a yaal
- (Rhet.) figure of speech which expresses an idea by implication
- niggardliness
- gold
விளக்கம்
பயன்பாடு
- தொழில் நுணுக்கம்
- அம்மாவுக்கு ராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களில் போதிய பரிச்சயம் இருந்தது. மேலோட்டமாக என்று இல்லை. மிக நுணுக்கமாக தெரிந்து வைத்திருந்தார் (அ.முத்துலிங்கம் நேர்காணல் - ஜெயமோகன்)
- கதவிலும், வெளி வளாகச் சிலைகளிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள் (வேதக்கோவில், ஷங்கரநாராயணன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் (நாலடி, 352)
- நான்மறை நுணுக்கமும் (உபதேசகா. சிவபுராண. 4)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நுணுக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +