யாழ்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- பொருட்பெயர்
பொருள்
(பெ) யாழ்
- யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய பண்டையத் தமிழ் நரம்பு இசைக்கருவி.இவற்றில் பல வகைகள் உண்டு.
- யாழ் இணையத்தளம்.link
படங்கள்
[தொகு],
விளக்கம்
[தொகு]இதன் இசையொலி பெருக்கி (resonator) தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]யாழ் மூடி,பக்க வாத்தியம், இசைக்கருவி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்-harp
இலக்கியமைவு
[தொகு]திருக்குறள்
[தொகு]- குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
- மழலைச்சொல் கேளா தவர். 66
- கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
- வினைபடு பாலால் கொளல். 279
திருமந்திரம் - மூன்றாந் தந்திரம்
[தொகு]- மணிகடல் யானை .(1). வார்குழல் மேகம்
- அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
- தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
நளவெண்பா - புகழேந்திப் புலவர்
[தொகு]- 68. நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்
- கொற்றத் தனியாழ்க் குலமுனிவன் - உற்றடைந்தான்
- தேனாடுந் தெய்வத் தருவுந் திருமணியும்
- 113. சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்
- தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு - காமன்தன்
- மாதுரங்கம் பூணும் மணித்தேரான் - சூதரங்கில்
- பாவையரைச் செவ்வழியாழ்ப் பண்ணின்மொழிப் பின்னுகுழல்
- பூவையரைத் தோற்றான் பொருது.
- 259. வைய முடையான் மகரயாழ் கேட்டருளும்
- தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்