பகுப்பு பேச்சு:அட்டவணைகளின் துணை வார்ப்புருக்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தமிழ்பொருள் ஆங்கிலப்பொருள்

வார்ப்புருக்களை பயன்படுத்துவது பற்றி உங்களின் கருத்தென்ன? 1 முதல் 9 வரை எண்களை மாற்றிப் பார்க்கவும்.(எ.கா) {{அட்டவணை9}}மத்தகம்த*உழவன் 00:27, 9 மே 2010 (UTC)

  • த*உழவனே! பயன்படுத்தல் நல்லது என்று நினைக்கிறேன். நினைத்துக்கொண்டேதான் மத்தகம் சொல்லைப் பதிவு செய்தேன். பழ.கந்தசாமி 00:32, 9 மே 2010 (UTC)
இந்த வார்ப்புரு திட்டம் வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். பக்கவாட்டில் ஆங்கிலத்தில் மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்? ஏன் இடாய்ச்சு மொழியில் அல்லது சீன மொழியில் கொடுக்கலாகாது? மொழிபெயர்ப்புகளைத் தனியாக கீழே கொடுப்பது சரியான முறை என்பது என் கருத்து. விக்சனரி என்பது பன்மொழி அகராதி. முதற்பக்கத்தில் கட்டம் கட்டி சொல்லப்பட்டுள்ள பகுதியைப் பாருங்கள்- பிற மொழி விக்சனரிகள் என்னும் பெட்டியில் உள்ள செய்தியைப் பாருங்கள். மரம் என்று சொல்லி பக்கத்திலேயே tree என்று கொடுக்க வேண்டிய தேவை ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இடது பட்டியில் ஈடான ஆங்கிலச் சொல்லுக்கோ பிறமொழி சொல்லுக்கோ இணைப்பு உள்ளது. தேவையானவர்கள் எளிதாக தாங்களுக்கு விருப்பமான மொழிக்கான இணைப்பைச் சொடுக்கித் தெரிந்துகொள்ளல்லாம். பன் மொழி பெயர்ப்புகளை தனியே கீழுள்ள பகுதியில் தருவதும் சரியே. ஆனால் அட்டவணையில் பக்கத்திலே ஒரு மொழிக்கு மட்டும் தருவது சரியல்ல. --செல்வா 01:39, 9 மே 2010 (UTC)
  • அட்டவணையின் முக்கியப் பயன் பலபொருட்கொண்ட ஒரு தமிழ்ச்சொல்லை மொழிபெயர்க்கும்போது வேற்றுமொழியின் வார்த்தையையும், அதற்கான தமிழ்ச்சொல்லையும் அருகருகே குறுக்குவரிசையில் (row)கொடுப்பது. இல்லையென்றால், பொருள் என்ற இடத்தில் கொடுக்கப்படும் வரிசை எண், மொழிபெயர்ப்பில் கொடுக்கப்படும் வரிசை எண் இரண்டையும் ஒப்பிடவேண்டும். அதேபோல், வாக்கியங்களைச் சேர்க்கும்போது அதன்வரிசை எண்ணையும் இணைக்கவேண்டும். அப்படிப்பட்ட அட்டவணை தேவைப்படும்போது, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளிலும் கொடுக்கவேண்டியிருக்கலாம். பலமொழிகளில் பொருள்தரும்போது அட்டவணை அவ்வம்மொழிகளில் வரவேண்டும். எப்படிச் செய்யலாம்? பழ.கந்தசாமி 01:50, 9 மே 2010 (UTC)
ஆங்கிலத்தில் பல மொழிகளில் தருகின்றார்கள் (மடக்கு, அல்லது தொங்கு நிரல் பட்டியலில்). எ.கா: [ http://en.wiktionary.org/wiki/wood இங்கு பார்க்கவும்]. நம் முதன்மைப் பொறுப்பு தமிழில் பொருள் தர வேண்டும் என்பதுதான். மொழி பெயர்ப்புகள் ஏதும் தரக்கூட வேண்டியதில்லை. ஆங்கில மொழி விக்கியில் வேண்டுமானால் நாம் போய் தரலாம். தமிழ்வழியாகப் பொருள் பெறும் பொழுது கவனம் சிதறுகின்றது. தொங்குநிரல் (drop down menu) வழி ஒவ்வொரு பொருளுக்கும் பல மொழிகளில் பொருள் தர இயலும். ஆனால் அவையும் அட்டவணையில் பக்கவாட்டில் இல்லாமல் கீழே தனியாக இருப்பது நல்லது. அகராதிகளில் பொருள்களை எண்வரிசையில் தருவது வழக்கம் அல்லவா? அதனையே நாம் பின் பற்றுவதும் முக்கியம். ஏன் ஆங்கிலத்தில் பொருள் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்??!! மத்தகம் என்பதில் நெற்றி என்று இருந்தால் போதாதா? நெற்றி என்னும் சொல்லைச் சொடுக்கினால் அதற்கான பிறமொழிச் சொற்களை ஒருவர் அறிந்து கொள்ளலாமே. ஆனால் கருத்து ஆங்கிலத்தில் அறிவதல்ல. ஆங்கிலச் சொல்லுக்கும் தமிழில் பொருள் அறிவதே நோக்கம். நாம் இந்தி, கன்னடம் போன்ற எல்லா மொழிச் சொற்களுக்கும் தமிழில் பொருள் தருவதே இத்திட்டத்தின் நோக்கம். மொழிபெயர்ப்புகளைத் தரலாம், ஆனால் அவை தனியாக கீழே தருதல் வேண்டும். --செல்வா 02:06, 9 மே 2010 (UTC)

1)தமிழ்விக்சனரி திட்டம் தொடங்கியதிலிருந்து, இதுவரைப் பதிவானச் சொற்களில் பெரும்பாலானவை (ஆங்கிலம்->தமிழ்) / (தமிழ்-->ஆங்கிலம்) அமைப்பில் இருப்பவையே ஆகும். மொத்த சொற்களில், 98%சொற்கள் இங்ஙனமே உள்ளன. அதுவும் தமிழ்-->ஆங்கிலம் சொல்லமைப்பு ஒப்பிட்டளவில் குறைவே ஆகும்.

2) ஒரு சொல்லுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள் வரும் போது, தேவைப்படும் மொழிபெயர்ப்பை தேடிப்பிடித்து அறிய வேண்டியுள்ளது. குறிப்பிட்ட பொருளுக்குரிய, மொழிபெயர்ப்பை தேடிப்பிடிப்பதில் சலிப்பே வருகிறது. இச்சலிப்பை, அட்டவணைப்படுத்துதல் நீக்குகிறது.

3) ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் வரும் போது, அதற்குரிய மொழிபெயர்ப்புகள், அருகிலேயே இருப்பது அறிவதற்கு எளிமையாக இருக்கிறது. தற்போதுள்ள முறை, உடன் அறிவதற்கு உகந்ததாக இல்லையென்பதால், எனக்கு அட்டவணைமுறையே, பொருத்தமாகப் படுகிறது.த*உழவன் 05:48, 9 மே 2010 (UTC)

எல்லா மொழிச்சொற்களுக்கும் தமிழ்வழி பொருள் சொல்வதே முதன்மையான பணி. தமிழ்ச்சொற்களுக்குப் பிறமொழிகளில் உள்ள ஈடான சொற்களைத் தரலாம், ஆனால் அவை ஆங்கிலத்தில் மட்டும் தருதல் சரியான முறை அல்ல. ஒரு தமிழ்ச்சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தால், ஒவ்வொரு பொருளுக்கும் ஈடான பிறமொழிச்சொற்களைத் தனியாக கீழே மொழிபெயர்ப்புகள் என்னும் பகுதியில் தருவது பொருந்தும் அட்டவணை இட்டு ஒரு மொழிக்கு மட்டும் மொழிபெயர்ப்பு தருவது ஒருசிறிதும் சரியல்ல. ஆங்கிலத்தில் மட்டும் ஏன் பொருள் சொல்ல வேண்டும்? ஏன் சீனத்தில், இந்தியில், மலையாளத்தில் சொல்லக்கூடாது? ஆங்கில விக்சனரியில் பொருள்வாரியாக பல மொழிகளில் பெயர்ப்புகள் தருகின்றார்கள் (பார்க்கவும்: http://en.wiktionary.org/wiki/wood). ஆனால் இவை எல்லாம் தனியான தலைப்பின் கீழ் பின்னே வருவன. முதலில் பொருள் தமிழில் தருதல் வேண்டும் (எம்மொழிச் சொல்லாயினும்). அங்கே பிறமொழிகள் பெயர்ப்புகள் வருதல் சரியல்ல. தமிழ்ப்பொருள் தரும் இடத்தில் பக்கத்திலேயே ஒரு மொழியில் (ஆங்கிலத்தில் மட்டும்) பொருள் தருவது தேவையற்ற சாய்வு மட்டுமல்லாமல், தமிழ்வழி பெறும் பொருளின் கவனத்தை சிதற அடிக்கின்றது. தமிழ் வழிப் பொருளையும் சரிவர தர இயலாமல், ஏதோ வேறு ஒரு சொல் மட்டும் இட்டுவிட்டு அதன் விளக்கத்தையும் ஆங்கிலவழி பெறுவதாகவே அமைந்துள்ன. இவை தமிழ்வழி பொருள் அறிவதையே தடுக்கின்றது. அண்மையில் பதிவான மத்தகம் என்னும் சொல்லைப் பாருங்கள். அதில் சில பொருள்களை தமிழில் விளக்காமல், ஆங்கிலத்தில் விளக்கிப் பொருள் சொல்லியிருப்பது தமிழ் விக்சனரியின் குறிக்கோளையே ஒருவாறு கெடுப்பதாகும். இதனை அச்சொல்லின் பேச்சுப் பக்கத்திலும் குறித்துள்ளேன். அட்டவணை பார்ப்பதற்கும் ஒரு அகராதி போல் தோற்றம் அளிக்கவில்லை. --செல்வா 05:32, 9 மே 2010 (UTC)

  • உங்களின் கருத்தறிந்தேன்.

1)தமிழில் விளக்கம் பெரும்பாலும் தரப்படுவதில்லை / இல்லை என்பதே நிலவரம். {{விளக்கம்}} பகுதியில் அத்தகைய விளக்கத்தினைத் தருவதற்கு, இந்த அட்டவணை பயன்பாடு தடுக்கவில்லை.

சொற்களால் விளக்கமளிப்பதனை விட, ஒரு நல்ல படம் சிறந்த விளக்கத்தினை கொடுக்க இயலும் என்பதாலேயே, மற்ற மொழிவிக்சனரிகளை விட, நம் விக்சனரியில் படங்களைச் சேர்க்கிறேன்/சேர்க்கிறோம்/இருக்கின்றன. படமிட முடியா இடத்தில், சொல்விளக்கம் தரப்படவேண்டும் என்பதே என் எண்ணம்.

எனது விருப்பத்தின் அடிப்படையில், எந்த முடிவும் நான் இங்கு எடுக்கவில்லை. என்னைச்சுற்றியுள்ள பள்ளிக்குழந்தைகளின் கருத்தினை அடிப்படையாகக் கொண்டே, எடுத்த வடிவமாற்றமே, இந்த அட்டவணைப் பயன்பாடு. அப்பள்ளிக்குழந்தைகளுக்கு, அகராதிக்கும், அகரமுதலிக்கும் உள்ள வேறுபாட்டினை பற்றி, இன்றைய தமிழக கல்விமுறை உணர்த்தியதாகத் தெரியவில்லை. ஆங்கில மாயையே சூழ்ந்துள்ளது.பிற மொழிகளைக் கற்பிக்கும் முறைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு இம்முறை உதவும். இது ஒரு இடமாற்றமே. இந்த அட்டவணை மூலம், ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும், ஆங்கில மொழிபெயர்ப்புகளை அருகருகே அமைக்கப்படுகின்றன. அவ்வளவே.

2) நம் விக்சனரியில், இந்தியோ அல்லது சீனமொழியோ அல்லது பிற மொழிபெயர்ப்புகளோ இதுவரை இல்லை என்பதே உண்மை. ஆங்கிலத்தில் தான், மொழிபெயர்ப்புத் தரப்படவேண்டும் என்று வற்புறுத்தப்படுவதில்லை. ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது என்ற கட்டாயமுமில்லை. ஆனால், ஆங்கிலத்திலும் இருக்கலாம். ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்பதே தமிழ் விக்சனரி நிலை. இந்தளவுக்கு தமிழ் விக்சனரி முன்னேறி உள்ளதற்கு, ஆங்கிலம்-தமிழ் வடிவமே காரணமாக இருக்கிறது. அந்த வடிவத்தினை, இந்த அட்டவணை மேம்படுத்துமென நம்புகிறேன்.

3)en:wood கண்டேன்.அங்கு fire wood என்பதில், விறகு என்பதனை என்னால் முன்தோற்றம் காண முடிகிறது. ஆனால், அச்சொல்லை அங்கு சேமிப்பது எப்படி என்று புரியவில்லை. எப்படியிருப்பினும், ஆங்கில விக்சனரியின் பல வசதிகள் இங்கில்லையென்பது, நமது பின்னடைவையே காட்டுகிறது.

சிந்திக்கிறேன். நன்றி.மீண்டும் தொடர்வோம்.த*உழவன் 07:55, 9 மே 2010 (UTC)

மன்னிக்கவும், அட்டவணை நன்றாக இல்லை!! உண்மையிலேயே நன்றாக இல்லை! விக்சனரியின் நோக்கம், (1) எல்லா மொழிச் சொற்களுக்கும் தமிழில் விளக்கம் இருக்க வேண்டியது. (2) அன்றாட வழக்கில், இலக்கிய வழக்கில் எடுத்துக்காட்டுகள் தருதல், (3) இலக்கணக் குறிப்புகள் தருதல், (4) சொற்பிறப்பியல் தருதல் இவை அனைத்தும் தமிழில் இருத்தல் வேண்டும். (5) மேலும் உதவ படங்கள் தருதல் இவையே முதன்மையான குறிக்கோள்கள். ஈடான பிறமொழிச் சொற்களைத் தருவது அடிப்படைத் தேவையே இல்லை (ஏனெனில் இடப்புறம் உள்ள பிறமொழி விக்சனரி இணைப்புகள் அதனைத்தான் செய்கின்றன). ஆனால் தரலாம். அவற்றைப் பின்னே தனிப்பகுதியில் தருதல் வேண்டும். விளக்கம் எல்லாம் ஆங்கிலத்தில் தருவது நாம் ஏதோ ஆங்கிலத்துக்கு அகராதி எழுதுவது போல் உள்ளது. ஈடான சொல் தரலாமே ஒழிய (அதுவும் பல மொழிகளில்), விளக்கமே ஆங்கிலத்தில் தருவது தமிழ் விக்சனரியின் நோக்கத்தையே மாற்றுவதாகும். அதுவும் தமிழில் இல்லாத விளக்கத்தை ஆங்கிலவழி தருவதால், ஆங்கிலம் அறிந்தவர் தெளிவாகவும் தமிழ் அறிந்தவர் குறைவாகவும் பொருள் புரிந்து கொள்ளுமாறு உள்ளது. ஏன் ஆங்கிலத்தில் விளக்கம் தர வேண்டும்??! ஈடான சொற்களைப் பல மொழிகளில் இருந்தும் தருமாறு வசதி இருக்க வேண்டும் என்பது ஏற்புடையதே. ஆனால் முன்பிருந்த மொழிபெயர்ப்பு என்னும் பகுதி இதற்கு மிகவும் துணையாக இருந்தது. இப்பொழுது நீங்கள் தரும் அட்டவணை மிகுந்த தடையாக உள்ளது. தமிழை தாழ்ந்த இரண்டாம் நிலைக்குத் தள்ளுவதை நான் ஏற்க உடன்படேன். ஆங்கில மொழி பெயர்ப்புச் சொற்களை வரவேற்கின்றேன், அதே போல பிற மொழிகளில் உள்ள ஈடான சொற்களைக் காணவும் விழைகிறேன், ஆனால் விளக்கத்தை ஆங்கிலத்தில் கொடுப்பதை ஆங்கில விக்கியில் வைத்துக்கொள்ள வேண்டும். நாமும் அங்கு சென்று விளக்கம் சேர்க்கலாம் அல்லது ஈடான சொற்களைச் சேர்க்கலாம். நான் இப்படி செய்ததும் உண்டு. மொழி பெயர்ப்பு என்பது கடைசியில் தனிப் பகுதியாக இருப்பதே நல்லது. ஆங்கில விக்சனரியிலும் இப்படியே செய்கின்றனர். பிற மொழி விக்சனரிகளிலும் இப்படித்தான் செய்கின்றனர். பொருளாக அட்டவணையைச் சேர்ப்பதைக் கைவிட வேண்டுகிறேன்.--செல்வா 14:28, 9 மே 2010 (UTC)
  • அனைத்து மொழிவிக்சனரிகளும் ஏறத்தாழ ஒருமாதிரி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில், மொழிபெயர்ப்புகள் தனித்திருந்தால் நன்றாக இருக்கும் என்பதனை ஒப்புக்கொள்கிறேன்.அதனால் அதற்குரிய வார்ப்புருவை மட்டும், அட்டவணையிலிருந்து நீக்குகிறேன்.

அட்டவணையின் பயன்பாடு விரிவானது. சுருக்கமாகச் சொன்னால், படிப்பவரின் கவனத்தினை குவிக்கிறது. தற்போதுள்ள முறை, படிப்பவரின் கவனத்தை சிதறவே வைக்கிறது. நேரத்தினை விழுங்குகிறது.

ஆங்கில விக்சனரியின் பல வசதிகள் இங்கில்லை. எனவே, அவ்விக்சனரியோடு, தமிழ் விக்சனரியை ஒப்பிடுவது உகந்ததாக படவில்லை. அவ்வசதிகளைப் பற்றி நாம் ஆலோசிக்காமல் இருப்பது நமது முன்னேற்றத்திற்கு வழி வகுக்குமா?

தமிழ்வழியாக பல மொழிகளையும் அறிய வேண்டும்/ தெரிவிக்க வேண்டும் என்றே நானும் செயல்படுகிறேன். அதே சமயத்தில் பன்னாட்டில் வாழும் தமிழருக்கு, தமிழ் மொழியில் மட்டும் கற்பிக்க இயலாது.

ஒரு பங்களிப்பாளரைத் தமிழ் மொழியில் விளக்கம் தர நாம் கேட்க முடியுமே ஒழிய, வற்புறுத்த முடியாது. ஏனெனில், அவர் வாழும் சூழ்நிலையில், அவரால் இயைந்த மொழியில் தான் அவரால் விவரிக்க முடியும். இப்போதைக்கு ஆங்கில மொழியே இருக்கிறது. ஆங்கிலம் வழியே தமிழ் கற்பவர் ஏராளம். அது தனித்தொழிலாகவே நடக்கிறது. தமிழ் எழுத்துக்கள் இல்லாமல், இலத்தீனிய எழுத்துக்கள் வழியாக தமிழ் இலக்கியங்கள் கற்பிக்கப் படுகின்றன. தமிழிணையப் பல்கலைக் கழகமும் அதனையேச் செய்கிறது.

கடைசியாக நீங்கள் //மன்னிக்கவும்// என்று துவங்கியிருந்திங்க. அத்தகையச் சொல் என்னை மிகவும் பாதித்து விட்டது. தவறுகள் ஏதும் இல்லா இடத்தில், அச்சொல் வேண்டாம். கருத்தாடலில் கருத்து வேறுபாடுகள் இயல்பு தானே? அவ்வேறுபாடுகள் இல்லா உரையாடல், ஒரு உயர்நிலையை நோக்கியதாக இருக்காதல்லவா?

நான் கணினியையோ அல்லது பிறவற்றினையோ முறைப்படி கற்றவனல்ல. எனது அன்றாடத் தேவைகளைத் தமிழோ அல்லது கணினியோ தரவில்லை. இருப்பினும் ஒரு ஈடுபாடு. தமிழ் விக்சனரியில் பல தொழில் நுட்ப வசதிகள் தேவை. அத்துறையில் இருப்பவர் அத்தேவைகளை இங்கு கொணர்ந்து 'சேர்க்கவில்லையே' என்பதே என் ஆதங்கம்.

பிற மொழிகளை விட தமிழும், தமிழ் விக்சனரியும் முன்னணியில் இருக்க என் அனுபவத்தினை ஒட்டி செயல்படுகிறேன். அத்தகைய ஒரு முனைப்பே இந்த அட்டவணை முயற்சி. இதனை உருவாக்கும் போது இருந்த எண்ணங்கள் இப்போது மாறியுள்ளன. காலம் இன்னும் உணர்த்தும் என எண்ணி இவ்வுரையாடலை முடிக்க எண்ணுகிறேன்.

உங்களின் உயரிய நேரத்தினை எனக்காக செலவிட்டமைக்கு மகிழ்கிறேன். அதனால் என்னுள் சிறுமுன்னேற்றமே. மிக்க நன்றி.

என் அம்மா அடிக்கடி சொல்லுவாள். பேச்சைக்குறைப்பீர்! வேலையை செய்வீர்!! என்ற வரிகளை நினைவு கூர்ந்து விடைபெறுகிறேன்.-- உழவன் (Info-farmer)+உரை..த*உழவன் 06:03, 10 மே 2010 (UTC)

நான் மன்னிக்கவும் என எழுதியது, நீங்கள் பயனுடையதாக இருக்கும் என எண்ணி ஆர்வத்துடன் அட்டவணையை உருவாக்கி தந்ததற்கு நேர் எதிர்மாறான என் உள்வாங்கலை தெரிவிக்க வேண்டியிருந்ததால் (வருத்தப்பட்டுக்) கூறினேன். நான் மேலே கூறியுள்ளவற்றில் பல முக்கியமான செய்திகள் உள்ளன. அருள்கூர்ந்து தவறாக நினைக்கவேண்டாம். விக்சனரியின் முதல் பக்கத்தில் உள்ள "பிறமொழி விக்சனரிகள்" என்னும் பெட்டியையும், "கொள்கைகள்" என்னும் பக்கத்தையும் படித்துப் பாருங்கள், நான் சொன்னது அடிப்படை நோக்கத்தை வலியுறுத்தவே என்பது புரியும். --செல்வா 06:21, 10 மே 2010 (UTC)
  • அட்டவணையில் பலரும் செயல்படும் போது, குறைகள் நிறையத்தோன்றும் என்பதனைப் புரிந்து கொண்டேன்.எனவே அட்டவணைகளை அதிகம் பயன்படுத்த மாட்டேன். அனுபவத்திற்காக, மத்தகம் என்பதில் சோதனையிட்டுப் பார்த்தேன்.த*உழவன் 06:45, 10 மே 2010 (UTC)
  • பின்வருவனவற்றை சோதனைகள் இட்டு கவனிக்க வேண்டும். இவற்றால் தற்போதுள்ள அட்டவணை அமைப்பு நீக்கப்படுகிறது.

{.{அட்டவணை-தொடக்கம்|{{பொருள்}.}|{{மொழிபெயர்ப்புகள்}.}}}

{.{அட்டவணை-நடுகட்டம்|...|...}}

{.{அட்டவணை-முடிவு}}