பச்சி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்
பொருள்
[தொகு]- பச்சி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தமிழ் நாட்டில் மிகப் பிரபலமான ஒரு மாலை நேர உணவு வகை பச்சி...கடலை மாவு மற்றும் சிறிது அரிசி மாவைத் தண்ணீர் விட்டுக் கூழாகக் கரைத்துக்கொண்டு, அதில் மிளகாய்ப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள், விரும்பினால் சீரகம் ஆகியவைகளை விகிதாச்சாரப்படிச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்வர்...கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கப்பைக் கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய், வெங்காயம் போன்றக் காய்கறிகளில் விரும்பியவற்றை வில்லைகளாக வெட்டிக்கொண்டு, நன்கு காயும் எண்ணெயில் இட்டு ஆழப்பொரித்து எடுத்த உணவையே பச்சி என்பர்...பஜ்ஜி என்றும் வெகுவாகக் குறிப்பிடுவர்...மிளகாயை வெட்டாமல் முழுதுமாகவோ அல்லது பெருந் துண்டமாக வெட்டி மசாலாப் பொருட்களை அதில் திணித்தோ பொரித்து எடுப்பர்...
- காய்கறிகளைச் சேர்க்காமலும் மைதா மாவுக்கரைசலில் உப்பு, சீரகம், மிளகாய்ப்பொடிச் சேர்த்து, உருண்டைகளாகக் காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தும் 'பச்சி' செய்வர்... பொதுவாக எந்த மாவுப்பொருளையும் சிறிய உருண்டைகளாகப் பொரித்து எடுத்த உணவை 'பச்சி' என்பார்கள்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +