பனுவல்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஒலிப்பு[தொகு]
(கோப்பு)
பொருள்[தொகு]
- பனுவல், பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்றுகவி. முன்னுரை, அறிமுகம், நூன்முகம் என்பவை போல. பனுவல் எனும் சொல் பழைய பஞ்சாங்கம் என்றும் பிரதி என்பதே பின் நவீனத்துவச் சொல்லாடல் என்றும் நீங்கள் கருதக்கூடும். எமக்கதில் வழக்கில்லை.
- சிலப்பதிகாரத்தில், புகார்காண்டத்தில், மங்கல வாழ்த்துப் பாடலில், இளங்கோவடிகள் ஓதுகிறார். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என. அந்தப் பாணியில் புத்தகங்களைப் போற்றுவோம் எனும் குறிக்கோளுடன் 'பனுவல் போற்றுதும்'. (இந்த வாரம் கலாரசிகன், தமிழ்மணி, 01 Apr 2012 )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +