உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:இ.பு.ஞானப்பிரகாசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரை

[தொகு]

வாங்க! இ.பு.ஞானப்பிரகாசன்

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
த*உழவன் 09:37, 11 ஜூன் 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..
இ.பு.ஞானப்பிரகாசன்:
அமேசானின் அல்லி

நண்பரே!

உங்களைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்/உள்ளோம். விக்சனரி உங்களுக்கு எப்படி அறிமுகமானது என்று தெரிந்தால், அவ்வழியின் மூலம் பல பங்களிப்பாளர்களை அழைக்க ஏதுவாகும். உங்களுக்கு விருப்பமானத் துறையில் நீங்கள் பங்களிக்க என்னால் இயன்ற அளவு உதவ எண்ணுகிறேன். எதிர்பார்ப்புடன் முடிக்கும் ..(த*உழவன் 13:35, 11 ஜூன் 2010 (UTC))

வழிகாட்டல்கள்

[தொகு]
  1. எந்த பக்கத்தில் எழுதுகிறோமோ, அந்த பக்கத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும். அங்குள்ள மாற்றங்களை உணருங்கள்.எடுத்துக்காட்டாக- எனது உரையாடல் பக்கத்தினைக் காணுங்கள். சில மாறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளேன். அவற்றை உணருங்கள். பயனர்பக்கம் என்ற மேலுள்ள தலைப்பில், உங்களைப் பற்றி எழுதுங்கள். நான் இன்னும் 30 நிமிடங்களிருப்பேன்.தினம் ஏறத்தாழ 1மணிநேரம் ஓய்விலிருப்பேன். இந்த நேரம் உங்களுக்கு உகந்த நேரமா? த*உழவன் 14:03, 11 ஜூன் 2010 (UTC)

வருந்துகிறேன்!!

[தொகு]

நண்பரே! அருள் கூர்ந்து மன்னியுங்கள்! ஏறத்தாழ ஐந்தரை ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் உங்களுடைய இந்தத் தகவல்களைப் பார்க்கிறேன். 'விக்சனரி'யைத் தொடர்ந்து பயன்படுத்தித்தான் வருகிறேன். ஆனால், உள்நுழையவில்லை. ஒருவேளை, இடையில் ஓரிரு முறை உள்நுழைந்திருப்பேன், ஆனால், நீங்கள் தகவல்கள் அனுப்பியிருந்ததைக் கவனிக்கவில்லை.

த*உழவன் ஐயா! 'விக்சனரி' எனக்கு எப்படி அறிமுகமானது என நினைவில்லை. ஆனால், 2010-இல் என்னிடம் கணினி கிடையாது. கைப்பேசி வழியாகத்தான் விக்கிப்பீடியா, விக்சனரி போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தேன். கண்டிப்பாக இணையத்திலுள்ள வலைப்பூக்கள் வழியாகத்தான் இஃது எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், சரியாக நினைவில்லை. அதற்காகவும் நீங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்! எனக்காக அழகழகான படங்களெல்லாம் போட்டு எவ்வளவு இனிமையான வரவேற்பை அளித்திருக்கிறீர்கள்! நான் பார்க்கவேயில்லை. அதற்காக மிகவும் வருந்துகிறேன்!

உங்கள் வரவேற்பு, வழிகாட்டல்கள், அக்கறையோடு கேள்வி எழுப்பிப் பின் பதிலும் அளித்த இராஜ்குமார் அவர்களின் ஆர்வம் அனைத்துக்கும் உளமார்ந்த நன்றி!

அல்குல் பக்கத்திற்கு ஆதாரம் வேண்டும்

[தொகு]

தாங்கள் அல்குல் பக்கத்தில் பெண்குறி, vagina என்ற பொருள் என்று சேர்த்துள்ளீர்கள். இதை எங்கு அறிந்தீர்கள். ஏதேனும் ஆதாரங்கள். உள்ளனவா ?--இராஜ்குமார் 15:26, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி. அந்தப் பக்கத்திலேயே ஆதாரம் உள்ளது. --இராஜ்குமார் 15:48, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
  • அப்பக்கத்திலுள்ள சென்னைப் பேரகரமுதலி தொடுப்பினைச் சொடுக்கினால், ஆதாரத்தைக் காணலாம். நன்றி. பழ.கந்தசாமி 18:34, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

வருந்துகிறேன்!!

[தொகு]

நண்பர்களே! அருள் கூர்ந்து மன்னியுங்கள்! ஏறத்தாழ ஐந்தரை ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் உங்களுடைய இந்தத் தகவல்களைப் பார்க்கிறேன். 'விக்சனரி'யைத் தொடர்ந்து பயன்படுத்தித்தான் வருகிறேன். ஆனால், உள்நுழையவில்லை. ஒருவேளை, இடையில் ஓரிரு முறை உள்நுழைந்திருப்பேன், ஆனால், நீங்கள் தகவல்கள் அனுப்பியிருந்ததைக் கவனிக்கவில்லை.

அக்கறையோடு கேள்வி எழுப்பிப் பின் பதிலும் அளித்த இராஜ்குமார் அவர்கள், உதவிய பழ.கந்தசாமி அவர்கள் இருவருக்கும் உளமார்ந்த நன்றி!