பயனர் பேச்சு:Sarutv
தலைப்பைச் சேர்வாருங்கள், Sarutv!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி (பேச்சு) 11:23, 30 அக்டோபர் 2005 (UTC)
சில குறிப்புகள்
[தொகு]சாரு, வந்த புதிதிலேயே அனுபவம் வாய்ந்த பயனர் போல் பக்கங்களை நீங்கள் உருவாக்கத் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து உங்களிடமிருந்து பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறேன். இங்கு உருவாகும் அகராதி, தமிழர்கள் அனைவரும் எளிதில் இணையத்தில் அணுக வல்ல முதல் அகராதியாக விளங்கும் என்பது என் நம்பிக்கை.
விக்சனரி, பன்மொழி அகராதி என்பதால் முதலில் பக்கத் தலைப்பு எம்மொழியைச் சேர்ந்தது என்று தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். ஆங்கில alphabetகளை பல மொழிகளும் பயன்படுத்துவதால், முதலில் ஆங்கில alphabetகளை கொண்டு எழுதப்படும் சொல் எம்மொழிச்சொல் எனத்தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. அதனால் தான் Money என்ற பக்கத்தில் ஆங்கிலம் என்ற துணைத்தலைப்பின் கீழ் அதற்குரிய பொருள் கொடுக்கப்பட்டது. இதுவே arm என்ற சொல் ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய இருமொழிகளிலும் இருப்பதால் அப்பக்கத்தில் அவ்விரு மொழிகளுக்கும் இரு துணைத்தலைப்புகள் உருவாக்கப்பட்டு அந்தந்த மொழியில் உள்ள பொருள்கள் தரப்பட்டன. பக்கத்தலைப்பு தமிழில் இருந்தால் இவ்வாறு தமிழ் என்று துணைத்தலைப்பு ஆரம்பித்து அதன் கீழ் பொருள் தருவது அவசியமற்றதாகிறது. ஏனெனில் தமிழில் எழுதப்படும் எந்த சொல்லும் தமிழ் மொழியைச்சார்ந்ததே என்பது நாம் அனைவரும் அறிந்தது. அப்படியே தமிழில் எழுதப்படும் சொல் வடமொழி அல்லது பிற மொழி தழுவியதாய் இருந்தாலும் சொல் மூலத்தை விளக்குவதன் மூலம் அதை தெளிவுபடுத்த முடியும். விக்சனரியின் பணிகளில் ஒன்று ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் இணையான பிற மொழி சொற்களையும் சேர்ப்பது. அதன்படி நேரம், பிற மொழி உடையவர்கள் ஒவ்வொரு தமிழ் மொழி சொல் பக்கத்திலும் பிற மொழியில் அதற்கு ஈடான சொற்களை தருவது ஆகும். எடுத்துக்காட்டாக கண் பக்கத்தை பாருங்கள். உங்களுக்கு காட்டுவதற்காக ஆங்கில விக்சனரி பக்கத்தில் இருந்து இப்பக்கத்தை எடுத்தாண்டுள்ளேன். இப்பக்கத்தில் இன்னும் வார்ப்புருக்கள் முழுமையடையவில்லை மற்றும் மொழிப்பெயர்களும் ஆங்கிலத்தில் எழுதப்படாமல் தமிழில் எழுதப்பட வேண்டும். பிறகு, இவ்வாறான மொழிப்பெயர்ப்புகள் தமிற் சொல் பக்கங்களில் மட்டும் போதுமானது. அதாவது, கண்க்கு ஈடான ஆங்கிலப் பக்கமான eyeலும் இந்த மொழிப்பெயர்ப்புகளை திரும்ப பதிய வேண்டாம்.
பிறகு, சொற்பொருள் தரும்போது ஒத்த பொருள் தரும் சொற்களை ஒரே வரிசையில் தரவும். அதாவது, money என்பதற்கு பணம்,காசு ஆகிய இரு சொற்களும் ஒத்த பொருள் உடையவை. அவற்றை ஒரே வரிசையில் தரலாம். கண் என்பதற்கான இரு வேறு பொருள் தரும் சொற்களை வரிசைப்படுத்த நான தந்திருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். தொடக்கத்தில் இது போன்ற நடைக்குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்வது சற்றுக்கடினமாக இருக்கலாம். ஆனால், அனைவரும் இதை பின்பற்றும் போது தான் விக்சனரிக்கு ஒரு professional look வரும் என்று நம்புகிறேன்.--ரவி (பேச்சு) 11:50, 30 அக்டோபர் 2005 (UTC)
சாரு, உங்களைப்பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் கண்டு மிக மகிழ்ந்தேன். தமிழ் நாட்டுக்கு வெளியில் இருந்து தமிழுக்கு அரும்பணி ஆற்றும் பலரில் ஒருவராக நீங்கள் இருக்கிறீர்கள். வாழுத்துக்கள். நானும், உங்களைப் போல் தமிழக்கு ஏதாவது செய்ய வேண்டும் கொண்டிருந்து ஆனால் வழிமுறை தெரியாது திகைத்து இருந்தவன் தான். தற்பொழுது, தமிழ் விக்கிபீடியா மற்றும் விக்சனரியை மேம்படுத்துவது நல்ல வழியாகத் தென்படுவதால் அதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன்.
அப்புறம், நீங்கள் கேட்ட விளக்கம் இதோ: கண் பக்கம் இன்னும் முழுமையடையவில்லை, எனவே அதை முழு மாதிரியாகப் பின்பற்ற வேண்டாம் என்பதே நான் சொல்ல வந்தது. அங்கு இன்னும் சில வார்ப்புருக்கள் (templates) உருவாக்கப்படாததால் அப்பக்கம் சரியாக render ஆக வில்லை. அப்பக்கத்தில் உள்ள மொழிப்பெயர்ப்பு பட்டியலில் மொழிப்பெயர்கள் இன்னும் english, french என்று ஆங்கிலத்தில் தாம் எழுதப்பட்டுள்ளன. அவ்வாறு இல்லாமல் அப்பட்டியல் பெயர்களும் ஆங்கிலம், பிரெஞ்சு என்று எழுதப்படவேண்டும். அப்புறம், இம்மாதிரி மொழி பெயர்ப்பு பட்டியல்கள் தமிழ் தலைப்புடைய பக்கத்தில் மட்டும் இடம் பெற்றால் போதுமானது. கண் பக்கத்தில் இடம் பெற்றுள்ள பட்டியலை திரும்பவும் eye பக்கத்திலும் பதிய வேண்டிய அவசியமில்லை. --ரவி (பேச்சு) 17:53, 5 நவம்பர் 2005 (UTC)
Request
[தொகு]Saru, It'd great if u add the meaning of the words in the Summary or Surukkam box. so we can know the meaning from the recent changes without visting the page. -- சிவகுமார் 13:41, 27 நவம்பர் 2005 (UTC)
தமிழ்ச் சொற்கள்
[தொகு]சாரு,
marriage பக்கத்தில் கல்யாணம் என்று பொருள் தந்திருக்கிறீர்கள். பொதுவாக தமிழ் என்று உறுதிப்படுத்த இயலாத சொற்களைப் பொருளாகத் தராமல் இருப்பதை தமிழ் விக்சனரி கொள்கையாக வைத்திருக்கிறோம். எனவே திருமணம் என்ற சொல், பொருள், விளக்கம் மட்டுமே போதும். அதே வேளை, கல்யாணம் என்ற தனிப்பக்கத்தில் அதற்கான பொருள் தரப்பட்டிருப்பதையும் காணலாம். இது நல்ல தமிழ்ச் சொற்கள் தமிழரிடம் பரவ வழி வகுக்கும். நீங்கள் தொடர்ந்து விக்சனரிக்கு பங்களிக்க முனைந்திருப்பதற்கு நன்றி. http://dictionary.thenkoodu.com தளத்தில் அனைத்து இணையத் தமிழ் அகராதிகளுக்கான இணைப்புகளும் இருக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (நூல்) மிகவும் பயனுள்ளது. அதையும் இயன்றால் பெற்றுக் கொள்ளலாம்--ரவி 08:36, 23 மார்ச் 2007 (UTC)
ஆமாம் சாரு. எது தமிழ் இல்லை என்று முடிவு செய்வது சிக்கல் தான். ஆனால், தமிழ் இல்லை என்று உங்களுக்கு நன்கு தெரிந்த சொற்களைத் தவிர்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு, கிருஹப்பிரவேசம் போன்ற சொற்கள். அனைவரும் தவறு விடுவது இயல்பு. கவனித்து திருத்துகிறோம். ஆனால், இது போன்ற ஒரு விக்கி நடைமுறை உள்ளதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். சிவப்பணு பக்கத்தில் சில formatting மாற்றங்களைச் செய்துள்ளேன். அதைக் கவனிக்கவும். நன்றி--ரவி 18:36, 23 மார்ச் 2007 (UTC)
ஆங்கில விளக்கம்
[தொகு]சாரு, பக்கத்தின் தொடக்கத்தில் ஆங்கிலம் என்று தருவது அது என்ன மொழி என்று குறிப்பதற்கே. அதன் கீழ் false tears என்பது போல் ஆங்கில விளக்கம் தரத் தேவையில்லை. அதே வேளை synonymகளை பக்கத்தின் இறுதியில் ===ஒத்த சொற்கள்=== என்ற தலைப்பை உருவாக்கி அதன் கீழ் நீங்கள் தரலாம். --ரவி 21:20, 23 மார்ச் 2007 (UTC)
saru, no need to explain in english below the sub heading ==ஆங்கிலம்==. that heading just tells that the word belongs to english. in tamil wiktionary, we give all explanations in tamil only and in english wiktionary we explain in english for tamil words :)--ரவி 14:01, 30 மார்ச் 2007 (UTC)
- Sorry, I forgot again. Still getting used to the good practices. நீங்கள் தமிழிலில் எழுதினதையே திரும்பவும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதை நினைத்தால் நகைச்சுவையாக இருக்கிறது :D Sarutv 17:39, 30 மார்ச் 2007 (UTC)
நீங்க மறந்துட்டீங்க :) நான் திருப்பி இடித்துரைப்பது போல் இருக்கக்கூடாதேன்னு சொன்னதையே திரும்ப மொழி மாற்றி சொல்ல வேண்டியதாப் போச்சு :)--ரவி 21:01, 30 மார்ச் 2007 (UTC)
- அடுத்த தடவை மறந்தால் டச்சுல எழுதுவீங்களோ ;-) Sarutv 21:34, 30 மார்ச் 2007 (UTC)
format
[தொகு]saru, thanks for the important changes in the polish page. pls see the change i made to see the wiki format for giving different meanings of the same word.--ரவி 09:54, 19 ஏப்ரில் 2007 (UTC)
admin?
[தொகு]saru, would you like to be an admin in tamil wiktionary? you are visiting often here and it would help if you could assist in the cleanup and patrol jobs. and thanks for the tamil words for brackets. i didn't know them so far?--ரவி 11:54, 26 ஜூலை 2007 (UTC)
Gladly but you would have to mentor me for a while though and need to guide me for a bit - like tagging pages as requiring cleanup, etc. -- 22:19, 26 ஜூலை 2007 (UTC)
thatsn't big thing. i can help. let me nominate u--ரவி 10:12, 27 ஜூலை 2007 (UTC)