கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Kattam


ஊசிக்கண்
ஊசிக்கண்
புண்ணின்கண்
பொருள்
  1. விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு.
  2. விழி
  3. நயனம்
  4. ஊசித் துளை.
  5. அறிவு
  6. புண்ணின் (வாய்) துளை
  7. இடம் (எ. கா.) கண்மாய்
நேத்திரம், நாட்டம், நோக்கம், சால் / சக்கு, அக்கம் /அக்கி, திருக்கு, திட்டி, திருட்டி, தாரை, விலோசனம், பார்வை, அம்பகம், கோ - இவையனைத்தும் கண்ணைக் குறித்த தமிழ்ச் சொற்களாகும்.
பயன்பாடு[தொகு]
  • கண்கள் மூலம் நம்மால் வெளியுலகம் பார்க்க முடிகிறது.
  • விழிகள் விழித்ததில் வீழ்ந்தான்
  • நயனத்தால் நடித்து காண்பித்து விட்டால் .....
மொழிப்பெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

கண் - கணி - காண்
கண்மணி, கண்மாய், கண்பார்வை, கண்புரை, கண்ணீர், கண்ணன், கண்ணொளி, கண்ணூறு
கட்புலம், கட்பொறி
கண்காணி, கண்ணயர், கண்ணடி, கண்மூடு, கண்கட்டு, கண்ணிமை
முதற்கண், நெற்றிக்கண், ஊனக்கண், பெட்டைக்கண், மாறுகண், கொள்ளிக்கண், கடைக்கண்
நகக்கண், ஊற்றுக்கண்-விழி
மனக்கண், ஞானக்கண்


( மொழிகள் )

சான்றுகள் ---கண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்&oldid=1973859" இலிருந்து மீள்விக்கப்பட்டது