பரதவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சென்னை மரீனாவில் பரதவர்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரதவர், பெயர்ச்சொல்.

  1. தமிழகத்தில் கடற் கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் மீனவர். மீன்பல பரவன் வலைகொணர்ந்திட்டனன் (திருமந். 2031).
  2. நெய்தல் நில மக்கள். மீன்விலைப் பரதவர் (சிலப். 5, 25);
  3. தென்திசைக்கண் ஆண்ட ஒருசார் குறுநிலமன்னர். தென்பரத வர் போரேறே (மதுரைக். 144).
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மற்றொரு வகுப்பார் பரதவர். கடற்கரையூர்களில் வாழ்பவர் பரதவர் என்று தமிழ் இலக்கியம் கூறும். பழங்காலத்தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலிய துறைமுக நகரங்களில் பரதவர் செழித்து வாழ்ந்தார்கள். காவிரிப்பூம்பட்டினம் பரதவர் மலிந்த பயன் கெழு மாநகரமாக விளங்கியது. கொற்கைக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, "தென்னாடு முத்துடைத்து" என்று எந்நாட்டவர்க்கும் காட்டியவர் பரதவரே. பரதவர் என்பது பரதர் என்று குறுகி, பரவர் என்று மருவி வழங்குகின்றது. தூத்துக்குடியில் பரவர் குலத்தார் இன்றும் செழுமையுற்று வாழ்கிறார்கள். (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
மீனவர் - பளிங்கர் - புளிஞர் - வேடர் - பரதர் - பரவர் - #


( மொழிகள் )

சான்றுகள் ---பரதவர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரதவர்&oldid=1986773" இலிருந்து மீள்விக்கப்பட்டது