பரதர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரதர்(பெ)

 1. பரதவர், மீனவர். படர்திரைப் பரதர் மூன்றில் (கம்பரா. கார்கால. 74)
 2. வைசியர், பரதவர் கோத்திரத் தமைந்தான் (உபதேசகா. சிவத்துரோ. 189) பரத குமரரும் (சிலப். 5, 158)
 3. குருகுலத்தரசர்
 4. கூத்தர். பல்லியமொடு நடிக்கும் பரதரே (பிரபுலிங். வசவண்ணர்கதி. 4)
 5. தூர்த்தர், பரத்தர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. inhabitants of maritime districts, fishing tribes
 2. the mercantile tribe
 3. kings of the Kuru dynasty
 4. dancers and actors
 5. debauchees, profligates
 • தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மற்றொரு வகுப்பார் பரதவர். கடற்கரையூர்களில் வாழ்பவர் பரதவர் என்று தமிழ் இலக்கியம் கூறும். பழங்காலத்தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலிய துறைமுக நகரங்களில் பரதவர் செழித்து வாழ்ந்தார்கள். காவிரிப்பூம்பட்டினம் பரதவர் மலிந்த பயன் கெழு மாநகரமாக விளங்கியது. கொற்கைக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, "தென்னாடு முத்துடைத்து" என்று எந்நாட்டவர்க்கும் காட்டியவர் பரதவரே. பரதவர் என்பது பரதர் என்று குறுகி, பரவர் என்று மருவி வழங்குகின்றது. தூத்துக்குடியில் பரவர் குலத்தார் இன்றும் செழுமையுற்று வாழ்கிறார்கள். (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

பரதன் - பரத்தி - பரத்தன் - பரதவர் - பரவர் - வலைஞர் -வலையர் மீனவர் - பளிங்கர் - வேடர் - பழங்குடி - புளிஞர் - புளிந்தர் - புளினர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரதர்&oldid=1649982" இருந்து மீள்விக்கப்பட்டது