பரவர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரவர்(பெ)
- தமிழகத்தில் கடற்கரையோரங்களில் படகேறி மீன் பிடித்து வாழும் சாதியார்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மற்றொரு வகுப்பார் பரதவர். கடற்கரையூர்களில் வாழ்பவர் பரதவர் என்று தமிழ் இலக்கியம் கூறும். பழங்காலத்தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலிய துறைமுக நகரங்களில் பரதவர் செழித்து வாழ்ந்தார்கள். காவிரிப்பூம்பட்டினம் பரதவர் மலிந்த பயன் கெழு மாநகரமாக விளங்கியது. கொற்கைக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, "தென்னாடு முத்துடைத்து" என்று எந்நாட்டவர்க்கும் காட்டியவர் பரதவரே. பரதவர் என்பது பரதர் என்று குறுகி, பரவர் என்று மருவி வழங்குகின்றது. தூத்துக்குடியில் பரவர் குலத்தார் இன்றும் செழுமையுற்று வாழ்கிறார்கள். (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மீன்பல பரவன் வலைகொணர்ந்திட்டனன்(திருமந். 2031)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரவர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பரதவர் - பரதர் - வலைஞர் - மீனவர் - பளிங்கர் - வேடர் - பழங்குடி - புளிஞர் - புளிந்தர் - புளினர்