உள்ளடக்கத்துக்குச் செல்

பரஸ்தானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பரஸ்தானம், பெயர்ச்சொல்.

*புறமொழிச்சொல்--சமசுகிருதம்--परस्थान

  1. பிறவிடுதி
  2. பிராயணத்திற்காக நன்முகூர்த்தத்தில் தன் வீடுவிட்டுப் புறவீடிருக்கை.

விளக்கம்

[தொகு]
  • இராகுகாலம்,எமகண்டம், கரிநாள், வாரசூலை, துர்முகூர்த்தம் ஆகிய நேரங்களில் பிரயாணம் சொந்தவீட்டிலிருந்து துடங்கக்கூடாது என்பது இந்துக்களின் நம்பிக்கை...அப்படி பயணம் செய்தே தீரவேண்டும் என்று கட்டாயம் இருந்தால், பிற நண்பர், உறவினர் வீட்டுக்குப் பயணப்பெட்டிகள், மூட்டைமுடிச்சுக்களுடன் ஒரு நல்ல நேரத்தில் தம் வீட்டிலிருந்துப் புறப்பட்டுச் சென்றுத் தங்கிவிடுவர்...பின்னர் நேரம், காலம் எப்படியிருந்தாலும் தங்கிய வீட்டிலிருந்துப் பயணம் தொடங்குவர்...அப்போது எந்தவிதமான தீயவிளைவுகளும் இராது என்பது நம்பிக்கை...நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்குச்செல்ல முடியாதோர், நல்ல நேரமாகப்பார்த்து பயணச்சாமான்களை தலைவாயிற் கதவிற்கு அப்பால் வைத்துவிட்டு, பயண நேரம் வந்ததும் அங்கிருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு பயணத்திற்குக் கிளம்புவர்!!!...சமசுகிருதத்தில் ப1ர पर என்றால் அயல் எனவும் ஸ்தா2ந स्थान என்றால் இடம் எனவும் பொருளாகும்


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. staying at another's house before a journey
  2. leaving one's house at an auspicious time and staying at another's before starting on a journey


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரஸ்தானம்&oldid=1881027" இலிருந்து மீள்விக்கப்பட்டது