பல்லாண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்லாண்டு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பல ஆண்டு
  2. நீடு வாழ்க என்னும் வாழ்த்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. many years
  2. a blessing/benediction of longevity
விளக்கம்
  • பல + ஆண்டு= பல்லாண்டு
பயன்பாடு
  • பல்லாண்டு வாழ்க - Live for many many years! Long live!
  • மறுபடியும் அவனே, "நீ பெற்ற பரிசு - உன் மனைவி - எந்த வகையிலும் குறைவான பரிசு அல்ல. வாழ்க பல்லாண்டு" என்று சொல்லி மகிழ்ந்தான் (அகல் விளக்கு, மு.வரதராசனார்)
  • சக்கரவர்த்தி இன்னும் பல்லாண்டு இவ்வுலகில் வாழவேண்டும் (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

  1. பல்லாண்டும் பரமாத் துமனைச் சூழ்ந்திருந் தேத்துவர் (திவ். திருப்பல். 12)
  2. பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (திருவிசை. திருப்பல்)

ஆதாரங்கள் ---பல்லாண்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பல்லாண்டு&oldid=1068991" இருந்து மீள்விக்கப்பட்டது