பேச்சு:அணிப்பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் கீரி, அணில், கிளி ஆகிய உயிர் இனங்களின் புதுப் பிறப்புகளையே பிள்ளை என்று முதற்சொல் சேர்த்து அழைப்பர் என்று கூறப்படுகிறது...எனினும் இதற்கானத் தெளிவான, குழப்பமில்லாத விளக்கங்களைத் தமிழ் அகரமுதலிகளில் காணக்கிடைக்கவில்லை...இந்த உயிரினங்களில் பெரியவைகளுக்கும் சேர்த்தே பிள்ளை என்னும் சொல் கையாளப்பட்டிருக்கிறது...எனவே மேற்கண்ட இரு பொருட்களும் ஏற்புடையதே என்றுக் கொண்டேன்...வீட்டில் பெரியவர்கள் கிளிப்பிள்ளையைப்போல சொன்னதையே சொல்லாதே என்று கண்டிப்பதைக் கேட்டிருக்கிறேன்...இந்த சொல்லாட்சியில் பெரிய கிளியே குறிப்பிடப்படுகிறது...ஏனென்றால் இளங்கிளிகள் அதாவது கிளிக்குஞ்சுகள் அப்படிச் செய்யாது அல்லவா?...தவறு என்றால் மேற்கண்ட பக்கங்களைத் தக்கவாறுத் திருத்திவிடுங்கள்...--Jambolik (பேச்சு) 20:51, 14 மார்ச் 2014 (UTC)

தெளிவான விளக்கத்தை அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி. அணிப்பிள்ளை என்றே பல கிராம மக்கள் சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். இலக்கண அடிப்படையில் சொல்லெழுத்துக்களில் வேறுபாடு இருக்கலாம். எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. உரியவர்களிடம் இங்கு பதில் எழுதக் கேட்கிறேன். அணிற்பிள்ளை என அமைய வேண்டும் என்று எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 03:33, 15 மார்ச் 2014 (UTC)
ஆம்! அணிற்பிள்ளை என்பதுதான் மொழிச்சொல்...அணிப்பிள்ளை என்பது பேச்சு வழக்கு...இந்தப்பக்கத்தை அணிற்பிள்ளை என்ற பக்கத்திற்கு நகர்த்த முயன்றேன்...ஏற்கனவே அந்தப்பெயரில் ஒரு பக்கம் இருப்பதால் விக்சனரி அந்த முயற்சியை ஏற்கவில்லை...அணிப்பிள்ளை என்ற பேச்சுச்சொல்லும் இருந்துவிட்டுப் போகட்டுமென்று இருந்துவிட்டேன்...வேண்டாம் என்றால் ஏதாவது ஒரு பக்கத்தை நீக்கிவிடலாம்...--Jambolik (பேச்சு) 08:17, 15 மார்ச் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அணிப்பிள்ளை&oldid=1226494" இருந்து மீள்விக்கப்பட்டது