பேச்சு:ஆதிபாஷை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சமசுகிருதத்தை ஆதிபாஷையாக ஏறக முடியாது. உறுதியான ஆதாரங்கள் இல்லாததாலும், ஆதி மனிதன் பேசிய மொழி பிற உயிரினங்களின் குரலில் அடிப்படையில் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், சமசுகிருதம் எப்படி ஆதிமொழியாகும்? தேவபாஷை என்றும் ஆதிபாஷை என்றும் ஒரு சாராரே கூறிக் கொள்கின்றனர். இவர்கள் கருதுவதாகவே கட்டுரையில் குறிப்பிட வேண்டும். ஆதி பாஷை என்று நிரூபணமாகவில்லையே. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:11, 13 ஏப்ரல் 2013 (UTC)

ஆதியும் தமிழல்ல. பாஷையும் தமிழல்ல. அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும். தமிழ் இன்றும் உயிரோடும், துடிப்போடும் செயல்படுகிறது. ஆனால், அம்மொழி.. இதிலெல்லாம் நாம் கவனம் செலுத்த வேண்டாம். தமிழுக்கு செய்ய வேண்டியன ஏராளம். ஒன்றுபடுவோம். தமிழோங்க பாடுபடுவோம். 1930 களிலே எழுதப்பட்ட சென்னைப் பேரகரமுதலியைப் பற்றி பாவாணரே விரிவாக எழுதியுள்ளார். நூலகத்தின் அவரது நூல்கள் கிடைக்க வழிவகைசெய்துள்ளேன். இப்போதைக்கு, அத்தரவுகளை பதிவேற்றுகிறேன். ஆய்வு செய்வது எனது நோக்கமல்ல. அதனை ஏராளமான தமிழறிஞர்கள் செய்துள்ளனர். அவற்றையெல்லாம் மின்னாக்கம் செய்யவேண்டும். சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 06:14, 13 ஏப்ரல் 2013 (UTC)
தவறான பொருள் தந்து விடக் கூடாது என்கிற ஆதங்கம் தான், வேறொன்றும் இல்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:54, 13 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆதிபாஷை&oldid=1179527" இருந்து மீள்விக்கப்பட்டது