உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic ஊடக உரிம வேண்டுகோள்
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், தமிழ்க்குரிசில்!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--சண்முகம்ப7 (பேச்சு) 13:28, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

அம்மா

[தொகு]

அம்மா என்ற சொல்லைக் கண்டு அதனைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதுங்களேன்.அதனை மாதிரச்சொல்லாக அமைத்துள்ளேன்.-- உழவன் +உரை.. 13:44, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

மாதிரச் சொல் என்றால் என்ன?

வேற்று மொழிச் சொற்களை சேர்க்கும் போது, சொல்லை மட்டும் அம்மொழியிலும் பொருளை நம் மொழியிலும் தர வேண்டும். அப்படித் தானே? வேறு என்ன தகவல்கள் தரலாம்? உதவுங்கள். நன்றி!தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:02, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

இதுவரை கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் ஒரு தமிழ் சொல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அமைத்துள்ளேன். வேறுபல இருந்தால் அவற்றைக் கூறவும் அல்லது இது எப்படி இருக்கிறது என்று கூறவும். இனி உருவாக்கப் போகும் புதிய சொற்களுக்கு இதனை மாதிரியாக க் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன்.-- உழவன் +உரை.. 14:05, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

மலையாளம்-தமிழ் அகரமுதலி

[தொகு]

உங்களுக்கு மலையாளம் தெரியும் என்று உங்களின் பயனர்பக்கத்தின் வழி அறிந்தேன். எனவே, மலையாளம்-தமிழ் அகரமுதலியைத் துவங்குவோமா?வேறு திட்டங்கள் இருப்பின் முன்மொழியவும்.இப்ப கூகுள் மின்னஞ்சலுக்கு வரமுடியுமா?வணக்கம்-- உழவன் +உரை.. 16:50, 3 நவம்பர் 2012 (UTC)Reply

) பயனர்:Irumozhi மலையாளம் நன்கறிந்தவர். அவரிடம் கேட்டுப் பார்ப்போம். எனக்கு மலையாள எழுத்துகளைப் படிக்கவும் ஓரளவுக்கு சொற்களைப் புரிந்து கொள்ளவும், சமற்கிருத வேர்ச்சொற்களை அறிவேன் என்பதால் மலையாளம் தெரியும் என்று போட்டிருந்தேன். சரி, எனக்குத் தெரிந்ததை செய்கிறேன். :) எப்படி செய்ய வேண்டும் என்று குறிப்புகளை வழங்குங்கள். பழகிக் கொள்கிறேன். கூகுள் மின்னரட்டையிலும் உள்ளேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:25, 4 நவம்பர் 2012 (UTC)Reply
மிக்க நன்றி.எளிமையான பணி தான். இங்கிருந்து நாம் வேண்டிய தகவல்களை பெற இயலும். தேவையான தமிழ் சொல்லை உள்ளீடு செய்த பின்பு, வலப்பக்கம் உள்ள மலையாள மொழியை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தட்டச்சு செய்யவேண்டிய காட்டாயமில்லை. சரிபார்த்து உள்ளீடு இட்டால் போதும். ஒரு அட்டவணையச் செயலியில் ஒரு சொல்லை அமைத்து என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். ஒரு முறை பார்த்து விட்டு, நாம் தொடருவோம். -- உழவன் +உரை.. 10:18, 4 நவம்பர் 2012 (UTC)Reply

மின்னஞ்சல் முகவரியை வழங்குங்கள். சோதித்துப் பார்த்து அனுப்புகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:42, 4 நவம்பர் 2012 (UTC)Reply

என்பதில் வடிவமைப்பை மட்டும் மாற்றியுள்ளேன். ஏற்கனவே அம்மா சொல் வடிவமைப்பினை ஒத்தது இது.tha.uzhavan அட் ஜிமெயில் காம்-- உழவன் +உரை.. 11:02, 4 நவம்பர் 2012 (UTC)Reply

बिल्ला

[தொகு]

बिल्ला என்பதன் பேச்சுப்பக்கத்தையும் கவனிக்கவும். இனிவரும் சொற்களுக்கு பதிவேற்றவும், மெருகேற்றவும் பயன்படும். ta என்பது தமிழ் மொழியைக் குறிப்பது போல, இந்திக்கு hi உங்களுக்கு தெரிந்ததே. இவற்றை வைத்து பல இலட்சக்கோப்புகளை பொதுவகத்தில் எளிமையாக மேலாண்மை செய்கின்றனர். இங்கு ஒலிப்பு வார்ப்புருவில் மட்டுமே பயன்படுத்தினர். நான் முடிந்தவரை அனைத்து வார்ப்புருவிலும் பயன்படுத்தி வேலை நேரத்தைக் குறைத்துள்ளேன். அம்மாவில் இருக்கும் அதே முறைதான் இங்கும் கையாளப்பட்டுள்ளது. அதாவது, தமிழ் விக்கிப்பீடியா அமைப்பு. வணக்கம்.-- உழவன் +உரை.. 03:35, 30 சூலை 2013 (UTC)Reply

ஆம். நான் அறிந்ததே! ஆனால், அவசரத்தில் வார்ப்புருக்கள் நினைவில் இல்லை. எனவே அப்படியாயிற்று. இனி சரியாக செய்கிறேன்.:) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:19, 1 ஆகத்து 2013 (UTC)Reply

மலையாளம்-தமிழ் அகரமுதலி

[தொகு]

உங்களுக்கு மலையாளம்-தமிழ் அகரமுதலியில் ஆர்வம் இருக்கிறது. எனவே,indowordnetஎன்ற மலையாள ஆதார இணையதளத்தின் வளங்களை நன்கு பயன்படுத்தவும். அல்லது இந்த தளத்தின் தரவுகள் உதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். நீங்கள் நிரல்வள அறிவாற்றலில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், அது குறித்தும் உங்களிடம் உரையாட எண்ணுகிறேன். தொடரலாமா?வணக்கம்.-- உழவன் +உரை.. 11:37, 27 ஆகத்து 2013 (UTC)Reply

அண்மையில் கல்லூரி நண்பர்களுடன் கேரளத்தின் எறணாக்குளம் சென்றிருந்தேன். விக்கியில் கற்ற மலையாளத்தை அங்கே பயன்படுத்தினேன். வாசகங்களைப் படித்தேன். கொச்சையான மலையாளத்தில் உரையாடினேன். மூன்றே நாட்களில் பெருமளவு தேறிவிட்டேன். எனவே, மலையாளம் - தமிழ் மொழிபெயர்ப்புகளில் அதிகம் ஆர்வம் காட்டுகிறேன். மேலும், தற்போது தகவல் தொழினுட்ப நிறுவனமொன்றில் பயிற்சி மாணவனாக சேர்ந்துள்ளேன். எனவே, முன்பை விடவும், நிரலாக்கத்தில் நிறைய கற்றுள்ளேன். கற்கிறேன். :) என்ன செய்யலாம், எப்படி செய்ய வேண்டும் என வழிகாட்டவும். எப்போதும் உங்கள் பதிலை எதிர்நோக்கி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:39, 29 ஆகத்து 2013 (UTC)Reply
எனது ஆலோசனையைக் கேட்டதற்கு நன்றி. எனது அனுபவங்கள்/எண்ணங்கள் மொழிகளைக்கும் அப்பாலனாது. அழியும் மொழிகளின் நிலைகளைக் கற்றறிந்தபோது, எனது எண்ணங்களை மேலும் விரிவாக்கிக் கொண்டேன். இங்கு மலையாளம-தமிழ் அகரமுதலியைப் பொறுத்தவரை, உங்களது திறனை கீழ்கண்ட திட்டங்களில் செயல்படுத்தினால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன்.
  1. இங்குள்ள மலையாளச்சொற்களின் ஒலிக்கோப்புகளை பொதுவகத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு தமிழ்ஒலிக்கோப்பு அமைப்புகளைப் பாருங்கள். வேறு ஐயங்கள் இருப்பின் வினவும்.அறிமுகம் செய்வதற்கு ஆர்வமாக உள்ளேன். அவரவர் தாய்மொழி ஒலிக்கோப்புகளை பேசுவதற்கு,உங்கள் மலையாள நண்பர்கள் ஆர்வமாக நிச்சயம் இருப்பர். பொதுவகத்தில் அவற்றைப் பதிவேற்றுவதற்கு, commonist என்ற தானியங்கி உதவும்.
    கோப்பின் பெயரை File:Ml-{{PAGENAME}}.ogg என அமைத்துக் கொள்க. நல்ல அலைப்பேசியில் பதிவு செய்தால், கோப்பானது.amrவடிவத்தில் வரும். பிறகு, அதனை ogg வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
  2. முன்பு குறிப்பிட்ட மலையாளத்தரவுகளை(indowordnet) பயன்படுத்தி,5நிமிடத்திற்கு ஒரு புதிய சொல்லை உருவாக்கலாம்.
  3. நான் அவ்வப்போது, உங்களுடன் இணைகிறேன்.
  4. ஒரு தரவில், இங்கு உள்ள சொற்களும், இங்கு இல்லா சொற்களும் இருக்கும். அவற்றை இனங்கண்டறிய வேண்டும். இது குறித்து வோர்டு பிரசில் எழுதத் தொடங்கியுள்ளேன். அங்கு குறிப்பிட்ட படி சிவப்புச் சொற்களுக்குரிய, அர்த்தங்களை தனியே பிரித்தெடுக்க வேண்டும். அதற்கு நான் v-lookup முறையை கையாண்டேன். அது 100%சரியாக வரவில்லை. அதற்கு ஏற்ற நிரலை நீங்கள் எழுதலாம். உங்கள் நிரலாக்க மொழிபற்றி அறிய ஆவல். இன்னும் குறிப்பாக கூறவேண்டுமெனில், அகரமுதலிக்கென தனியொரு தொகுத்தல் சாளரம் நம் விக்கித்திட்டத்தில் இல்லை. அதனை நீங்கள் உருவாக்க இயலும் என எண்ணுகிறேன். அதற்கு எனது எண்ணங்களை உங்களுக்குக்கூற விரும்புகிறேன்.வணக்கம்.-- உழவன் +உரை.. 15:58, 29 ஆகத்து 2013 (UTC)Reply
  • மேற்கூறிய indowordnet பற்றிய உங்கள் கருத்தினை அறிய விரும்புகிறேன். ஒரு வேண்டுகோள். யாதெனில், வாரம் 10 நிமிடங்களாவது வந்து, மலையாளச் சொற்களைக் கவனிக்கவும். நான் இதற்குரிய மலையாள நண்பரின் துணையோடு, ஒலிக்கோப்புகளை உருவாக்க முயலுகிறேன். -- உழவன் +உரை.. 02:54, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
சரிண்ணே! செய்துடுவோம். அடிக்கடி இங்கு வருவேன். ஆனால், indowordnet தளம் ஜாவாஸ்கிரிப்ட் கொண்டு இயங்குகிறது. நான் குறைந்தளவு இணைய டேட்டாவை பெற்றுள்ளேன். அந்தப் பக்கத்தை என்னால் இயக்க முடியாது! :( போன மாதம், 600 எம்பி பேக் போட்டேன். இந்த மாதம் 100 எம்பி பேக் போட்டுள்ளேன். இதை வைத்துக் கொண்டு எழுத்துகள் மட்டுமுள்ள தளங்களைத் தான் பார்க்க முடியும். முடிந்தவரை, மலையாள விக்கியில் இருந்தே சொற்களை எடுத்து வருகிறேன் அண்ணே! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:03, 22 அக்டோபர் 2013 (UTC)Reply

பிஜியன்

[தொகு]

பிஜியன் மொழிக்கானப் பதிவுகளை தொடங்கியமைக்கு நன்றி. bati என்பதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். உங்கள் எண்ணமறிய ஆவல். விக்சனரிக்கான வடிவமைப்பு பணிகளில், நீங்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி.வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 18:22, 17 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி அண்ணே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:39, 18 திசம்பர் 2013 (UTC)Reply

ஊடக உரிம வேண்டுகோள்

[தொகு]

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 03:56, 3 சூலை 2014 (UTC)Reply

செய்துவிட்டேன் அண்ணே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:27, 4 சூலை 2014 (UTC)Reply

துப்புரவு திட்டம் அழைப்பு

[தொகு]
வணக்கம், தமிழ்க்குரிசில்.

விக்சனரியை செம்மையாக்குவதை நோக்காக கொண்ட துப்புரவு திட்டத்தில் பங்கெடுக்க தங்களையும் அழைக்கின்றோம். குழு உறுப்பினர்கள் பகுதியில் தங்கள் பெயரை இணைத்து தங்கள் சிறந்த பங்களிப்பை நல்க வாழ்த்துக்கள். மேலதிக விபரங்களிற்கு திட்டப் பக்கம் வருக.

பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:30, 28 மார்ச் 2016 (UTC)