பேச்சு:ஊம்புதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விக்சனரியில் காணக் கண் கூசும் படங்களிருந்தால் படத்தை மறைக்கும் நிரல்களை அமைத்துச் சமாளித்துவிடலாம்!...ஆனால் இந்தப் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் படிக்கவே நாக்கூசும் சொற்றொடர்களை என்ன செய்வது?...மிக வெளிப்படையான இந்த ஊம்புதல் பக்கத்தைப்பற்றி விக்கி குடும்பத்தாருடைய அபிப்பிராயங்கள் என்னவோ? இது ஆபாசமா? அல்லது அறிவுக்குத் தீனியா?--Jambolik (பேச்சு) 14:16, 13 சனவரி 2013 (UTC)Reply

இதுபோன்ற கொச்சை சொற்கள் இந்த 3மூன்று வருட பதிவில் ஓரிரு முறை வந்துள்ளது. நீக்கி விடலாம் என்பது எனது எண்ணம்? உங்களுக்கு நீக்க உடன்பாடா?பிறரும் நீக்கலாம் என்றால் நீக்க விடலாம்.-- உழவன் +உரை.. 07:38, 14 சனவரி 2013 (UTC)Reply
இந்தப் பக்கத்தையே நீக்கிவிடலாமென்பது என் எண்ணமல்ல...கொச்சைச் சொற்களுக்கும், பச்சைச் சொற்களுக்குமிடையே நிறைய வேறுபாடுகளுள்ளன...இது என்ன என்று சொன்னால் போதும்...அதை காமக்கதைகளை மேற்கோள் காட்டி விவரிக்கத் தேவையில்லை...இந்தக் காமக்கதைகள் வியாபாரநோக்குடன் எழுதப்படுவதும், அவைகளில் மிகைப்படுத்தப்பட்ட 'சமாச்சாரங்கள்' ஏராளமாக இருப்பதும் ஊரறிந்த விடயம்...என் மறுப்பே காமக்கதையை மேற்கோள் காட்டியது பற்றிதான்...விக்கி குடும்பத்தின் பெரும்பான்மை எண்ணத்தோடு ஒத்துப்போவேன்! --Jambolik (பேச்சு) 16:54, 14 சனவரி 2013 (UTC)Reply
நம் இருவருக்கும் எடுத்துக்காட்டுப் பகுதி நீக்கப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு. இன்னும் ஓரிரு வாரம் பிறரின் கருத்துக்குக் காத்திருப்போம். பிறகு, அதனை நீக்குவோம்.-- உழவன் +உரை.. 17:30, 14 சனவரி 2013 (UTC)Reply

எதிர்ப்பு[தொகு]

நண்பரே, விக்கியில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் கண்கூசும் படங்களுடனும், பச்சைப்பொருள் உடையதாகவும் இருக்கின்றன, தற்பொது 8, 9 ஆம் ஆண்டு பள்ளிப்புத்தகங்களில் கூட முழு நிர்வாண வரைபடங்கள் உண்டு, இச்சொல்லின் பயன்பாட்டை நீக்கப்போவதாக கூறுகிறீர்கள், இது வேடிக்கையாகத்தான் இருக்கிறது ஏனொன்றால் ஊம்புதல் என்பதற்கு உறிஞ்சுதல் என விளக்கம் தரப்பட்டுள்ளது, பயன்பாடு பற்றிய விளக்கம் இல்லாவிடின் சபையில் ஐஸ்கிரீமை சூப்புவதை, ஐஸ்கிரீமை ஊம்பகிறோன் என்று சொன்னால் எப்படி இருக்கும்?, பயன்பாடு தரப்பட்டால் இவ்வாறான சொற்களை சபையில் பயன்படுத்த மாட்டார்கள். நமது வேலை தணிக்கை செய்வதல்ல தமிழில் பயன்படும் சொற்களுக்கு பொருள் விளக்கம் தருவதே, இவ்வாறன தணிக்கையால் தான் நமது தமிழர் வரலாற்றின் பாதியை நாம் இன்று அறியாமல் இருக்கிறோம்--பரிதி 18:39, 14 சனவரி 2013 (UTC)Reply

வாய்மொழி வழக்காறு[தொகு]

காலங்காலமாக மக்களின் வாய்மொழியாகப் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் அகரமுதலியில் இடம் பெறுதல் இயல்பே, அப்படிச் செய்வதுதான் உண்மையான தொகுப்பாகும். ஆங்கில விக்சனரியில் புணர்தல் குறித்த சொல் http://en.wiktionary.org/wiki/fucking இயல்பாகக் காணப்படுகிறது. இச்சொல்லையோ அதன் பயன்பாட்டு விளக்கத்தையோ நீக்கத்தேவையில்லை. அண்மைக்காலத்தில் சிலர் அகரமுதலிகளில், நாட்டார் பாடல்களில் மக்களின் வாய்மொழிகளைச் சிலர் தணிக்கை செய்வது வரலாற்றை இருட்டடிப்பு செய்வதாகும்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:22, 15 சனவரி 2013 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஊம்புதல்&oldid=1167680" இலிருந்து மீள்விக்கப்பட்டது