பேச்சு:கைப்பொறுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பேரகராதியில் இந்தப்பக்கத்தில் தரப்பட்டிருக்கும் பொருளுக்கு உரிய சொல்லாக கைப்பொறுப்பாய் என்பது (பெயர்ச்சொல்லாக) கொடுக்கப்பட்டிருக்கிறது...இதே சொல்லை மற்றொரு இடத்தில் உரிச்சொல்லாகவும் தரப்பட்டிருக்கிறது...பெயர்ச்சொற்கள் ஆய் என்னும் ஒலியில் முடிவடையாது என நினைக்கிறேன்...ஆகவே இந்தப்பக்கத்தின் பேரகராதியின் தலைப்பு தவறாக இருப்பதாகப்பட்டதால் கைப்பொறுப்பு என்னும் பெயர்ச்சொல்லாக மாற்றியுள்ளேன்..பேரகராதியில் இந்த இரு சொற்களின் ஆங்கில ஒலிபெயர்ப்பு மிகச்சரியாக kai-p-poṟuppāy (உரிச்சொல்) மற்றும் kai-p-poṟuppu (பெயர்ச்சொல்) என கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்..இத்தகைய விடயங்களை சொற்களை தனித்தனியாக பதிவேற்றும்போதுதான் சீராகக் கவனிக்கமுடிகிறது..என் நோக்கில் தவறு இருந்தால், மன்னித்து, இந்தப்பக்கத்தை ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டுகிறேன்..--Jambolik (பேச்சு) 17:14, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

ஒவ்வொரு சொல்லாக சரிபார்ப்பது உயர்வானது. அந்த வகையில், உங்களது பதிவேற்றங்கள் 100%தவற்றது என்பதே என் எண்ணம். பிழையிருப்பின் மாற்றுங்கள். மன்னிப்பு என்றெல்லாம் கூறவேண்டாம். பயனர் சுந்தர் கூறியது நினைவில் வருகிறது. அகலமாகவும் உழுதல் வேண்டும், ஆழமாகவும் உழுதல் வேண்டும் எப்பக்கத்தில் என்று ஞாபகம் வரவில்லை. எனது நோக்கம் இல்லாததை உருவாக்குவது, இருப்பதை மேம்படுத்துவது. தொடர்ந்து மேம்படுத்தக் கோருகிறேன். மூலத்தரவில் பல பிழைகள் இருக்கிறது. அவற்றை மாற்ற உங்களைப் போன்ற, தமிழ் பற்றாளர் நிறைய வேண்டும் என்பதே எனது அவா. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 17:44, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
  • ஆம், பேரகராதியின் மூலத்தரவில் பல இடங்களில் ஒரு சொல்லின் தமிழ்ப் பொருளுக்கும், ஆங்கிலப் பொருளுக்குமிடையேகூட முழுமையான ஒற்றுமையில்லை...அவற்றையும் மற்ற கரடுமுரடான விடயங்களையும் மாற்றிதான் எழுதிவருகிறேன்...பேரகராதியின் சொற்கள் அனைத்தையும் தமிழ் விக்சனரிக்குக் கொண்டுவருதல் என்பது மிக உயரிய நோக்கமே...எனவே தலைப்புச் சொற்களைத் தவிர ஏனைய விடயங்களை அனுசரணையாக மாற்றிக்கொள்ளலாம் என்பதே என் திடமான எண்ணம்...ஏதோ ஒரு காலப்புள்ளியில் எல்லா பதிவேற்றங்களும் கைதேர்ந்தோரால் தணிக்கைக்கு உள்ளாகுமென்பதால் தவறு, குறைகளைப்பற்றிக் கவலையில்லை.--Jambolik (பேச்சு) 19:07, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
தங்களின் விளக்கம், அப்பேரகரமுதலியின் களைகளை நீக்குவதில் அயர்வான எனக்கு, புத்துணர்ச்சி அளிக்கிறது. இனி பதிவேற்றத்தை வேகப்படுத்துவேன். தயவுசெய்து நீங்கள் கருதும் பிழைகளையும், செய்ய வேண்டிய மாற்றங்களையும் அப்பகுப்பின் பேச்சுப் பக்கத்திலே குறிப்பிடுங்கள். வெளியில் இருந்து தரவுகளை இங்கு கொணர்ந்த பிறகு, அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது எளிதாக உள்ளது. இருப்பினும், இயன்றவரை பிழைகளை முன்கூட்டியே தெரியவரும் போது, அவற்றை நீக்குவதற்காகவும், மாற்றுவதற்காகவும் நிரலாக்கத்தில் மாற்றங்களை உகந்த நண்பர்களின் துணையால் ஏற்படுத்துவேன். வணக்கம். --தகவலுழவன் (பேச்சு) 00:52, 26 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கைப்பொறுப்பு&oldid=1266868" இலிருந்து மீள்விக்கப்பட்டது