பகுப்பு பேச்சு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பலரின் நிரல் நுட்பங்களையும், ஆலோசனைகளையும் கொண்டு இப்பகுப்பு வளர்க்கப்படுகிறது. இப்பகுப்பிற்குரிய மூலதரவில் உள்ள களைகள் பெருமளவு நிரல் மேலாண்மையால் சீர்படுத்தப்பட்டே பதிவேற்றம் செய்யப்படுகிறது. இருப்பினும், 100% மிகப்பொருத்தமாக இல்லை. எனவே, ஒவ்வொரு சொல்லாக சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அங்ஙனம் சரிபார்க்கும் போது கீழ்காணும் பிழைகள் களையப்பட வேண்டியுள்ளன. இப்பகுப்பில் இருந்து ஒரு சொல்லை நீக்க, பின்வரும் ஏதேனும் களைகளை களைக. பிற கருத்துக்களையும், எண்ணங்களையும் இங்கு கூறினால், மறுசீராக்கம், வழமைபோல பிறரின் கலந்துரையோடு செய்யப்படும். போதிய மனிதவளம் இல்லாமையால் இக்கோரிக்கையை ஏற்க. நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:34, 4 நவம்பர் 2014 (UTC)

மேம்படுத்த வேண்டியன: களைகள்[தொகு]

 1. மொழிபெயர்ப்பு பகுதியில் இருக்கும் தமிழ் விளக்கம்:(எ. கா.) மரபினோர் → ( நிறமிட்ட பகுதிகளில், இச்சொல்லின் களை நீக்கப்பட்டுள்ளது)--தகவலுழவன் (பேச்சு) 01:41, 4 நவம்பர் 2014 (UTC)
 2. ஆங்கில சொற்சுருக்கங்களில் வரும் முதல் புள்ளிக்கு மாற்றாக #:{{எ. கா.}} என்பது வந்து, அடுத்த வரிக்கு சென்றுவிடும். அதனை நீக்கி, அவ்விரண்டு வரிகளையும் ஒன்றாக்கி, சீர்செய்ய வேண்டும். புதிய சொற்கள் பதிவேற்றத்தில் இப்பிழை குறைக்கப்பட்டாலும், நிரல் மாற்றத்திற்கு முன் செய்த சொற்களில் இருக்கிறது. எனவே, அப்பிழை இருக்கும் நீக்குக.
 3. பகுப்பு மேம்பாடு செய்யலாம். அதவாது அச்சொல்லின் உகந்த பகுப்பை இணைக்கலாம். அவ்வாறு இணைக்கும் போது இப்பகுப்பினை நீக்கி விடலாம். (எ. கா.) மயக்கநதாதி (ஏற்படுத்திய மாற்றம்)
 4. தமிழ் பொருளுக்கு அடுத்து வரும் இலக்கிய மேற்கோளுக்கு முன் #:{{எ. கா.}} என்பதை இட்டு, அதனை அடுத்து வரியில் அமைக்க வேண்டும்.
 5. ஒரு சொல்லிற்கு இரண்டு தரவுப்பக்கம் இருக்கும் போது, அவைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஏனெனில், தானியங்கி ஒரு தலைப்பில் உருவாக்கம் நிகழ்ந்து விட்டால், அதனை விட்டு அடுத்தத் தலைப்புக்குச் சென்று விடும். பக்கத்தை மேம்படுத்தும் நிரலாக்கம் எழுதப் பட வேண்டும் அல்லது பயனர்களே ஒவ்வொன்றாக ஒருங்கிணைத்து மேம்படுத்த வேண்டும். (எ. கா.) - பேச்சு:கைப்பாணி
 6. தலைப்புச் சொற்களிலும் பிழைகள் களையப்பட வேண்டும் பேச்சு:கைப்பொறுப்பு
 7. காண்க : என்பது வரும் சொற்களில் ஆங்கில விளக்கமும், தமிழ் விளக்கமும் இடம் மாறி சீரற்று அமைந்துள்ளன. எனவே, அதற்கான நிரலாக்கத்தை என்னால் உருவாக்க இயலவில்லை. ஒவ்வொன்றாக பார்த்து உரிய பகுதியில் இடம் மாற்றுவதே 100% சரியாக வரும். (எ. கா.) மிருத்தாலகம்
 8. வெகு குறைவான சொற்களில் தான் # குறியீடுகள் இல்லாத விளக்கங்கள் அமையும். (எ. கா.) மிருகாரி
 9. ஆங்கில விளக்கங்கள் வரிசைப் படுத்தப்படாமல் இருக்கலாம். தேவையான இடத்தில் # குறியீடு இடலாம் (எ. கா.) வயின் ஏற்படுத்திய மாற்றம்
 10. வெளியிணையத்தில் உள்ள தலைப்புச்சொல் குறியீடுகளுடன் இருக்கின்றன. அவற்றிற்கு , ஆதாரவார்ப்புரு சரியாக இல்லை. அதனை இப்படி மாற்ற வேண்டும். (எ. கா.) துவளுதல்
 11. பேச்சு:ஆலம் போன்று வார்ப்புருக்களில், வழு இருக்கலாம். ஒரே மாதிரியான சொற்களுடைய வார்புருக்களில், புள்ளியால் வழு ஏற்படலாம்.