பேச்சு:சேர்த்தியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ் இலக்கியங்களில், சேர்த்தியம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தேன். இல்லை என வந்தது. ஆனால், சேர்த்திய என்ற தேடியபோது, பின்வரும் இலக்கிய மேற்கோள்கள் கிடைத்தன. தமிழ் இலக்கியம் கற்றோரே இதன் பொருத்தத்தைக் கூற இயலும்.

  • அகநானூறு: மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி
  • பதிற்றுப்பத்து: மனை சேர்த்திய வல் அணங்கினான்
  • திருமுருகாற்றுப்படை: ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
  • பதினோராம் திருமுறை: ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை\
  • கம்பராமாயணம்: செய்ய பூம் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு, சால
  • கந்தபுராணம்: சிந்தை செய்திடேல் எம் முடி சேர்த்திய சிறப்பால்
  • மணிமேகலை: செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்
  • தேம்பாவணி: சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி, சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம்?
  • தேவாரம்: செல்வர் ஆக நினையும் படி சேர்த்திய செந்தமிழ்
  • வில்லிபாரதம்: தேக்கிய செங் கனி இதழ் ஆர் அமுது உண்டு உண்டு, சேர்த்திய கைந் நெகிழாமல் சேர்ந்து சேர்ந்து,

---- உழவன்+உரை.. 00:46, 11 மே 2015 (UTC) [பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சேர்த்தியம்&oldid=1288162" இலிருந்து மீள்விக்கப்பட்டது