உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அறிமுகம்

[தொகு]

அனைத்தையும் பற்றி அறிய எமக்கு உறுதுணையாக இருப்பது கல்வியே. கல்வியை துறைகளாக பிரித்து ஆழமாக ஆய்வார்கள். அறிவின் வெவ்வேறு துறைகளை இயல்கள் என்று தமிழில் வழங்கப்படுகின்றது. குறிப்பாக ஒரு விடயத்தின் கல்விசார் வகைப்படுத்தலையே இயல் குறித்து நிற்கின்றது.


வகைப்படுத்தல் அறிதலின் ஒரு முக்கிய வழிமுறை. அனைத்தையும் இயல்களாக வகுக்கும் பொழுது நாம் உலகை நோக்கி ஒரு புரிதலை, பார்வையை முன்வைக்கின்றோம். இவ்செயல்பாடு எம் கல்விக்கும் தேடல்களுக்கும் ஒரு அடிப்படை அம்சம்.


விக்சனரி கல்வித் துறைகள் பின்னிணைப்பில் இயல்கள் பட்டியலிடப்பட்டும், வகை செய்யவும் படுகின்றன. தற்சமயம் நான்கு நிலைகளில் வகை செய்யப்படுகின்றன. இவ் இயல்களின் வகைப்படுத்தல் தமிழ் விக்கிபீடியாவை வகைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.


செயல்பாடுகள்

[தொகு]
  • இன்னும் பல துறைகள் அல்லது இயல்கள், துணை இயல்கள் தொகுக்கப்படவேண்டி இருக்கின்றது, அவற்றை தொகுக்கலாம்.
  • வெவ்வேறு சொற்கள் வெவ்வேறு நாடுகளில் உபயோகிக்கப்படுவதுண்டு, அவற்றை சேர்க்கலாம்.
  • மேலும் உங்களின் சிந்தனைக்கு ஏற்றவாறு மேன்படுத்தலாம்.


சிறு வேண்டுகோள்

[தொகு]

சொற்களை பரிந்துரை செய்யும் பொழுது, ஏற்கனவே உள்ள சொற்களை தயவு செய்து நீக்காதீர்கள்.

மொழிபெயர்க்க வேண்டிய சொற்கள்/பகுப்புக்கள்

[தொகு]
  • Folklore - நாட்டுப்புறக் கலைகள்
  • Mythology - தொன்மவியல்
  • Mass media - வெகு மக்கள் ஊடகங்கள்
  • Demography - குடித்தொகையியல்
  • Internet - இணையம்
  • Material Science
  • Music - இசை
  • Performing Arts - அவைக்காற்று கலைகள்
  • Psychiatry - மனநோயியல்
  • Sexuality
  • Sports and Recreation
  • Toxicology - நச்சியல்
  • Transportation - போக்குவரத்து
  • Urban Studies - நகரியல்
  • Women Studies - பெண்ணியல்
  • Transforms
  • -Fourier Transform
  • -Wavelet Transform
  • -Laplace Transform
  • -Logarithms - மடக்கைகள்
  • Data Management - தரவு மேலாண்மை
  • Digital Mathemathics
  • Combinatorics
  • Cryptography
  • Coding Theory
  • Complex Numbers - சிக்கல் எண்கள்
  • Epidemology

துணை வெளி இணைப்புகள்

[தொகு]

தமிழ் வரலாற்றில் வகைப்படுதல்

[தொகு]

திருக்குறள்

[தொகு]

திருக்குறள் வகைப்படுத்தல் செயல்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும். அதன் 1330 குறள்களும் பால்கள், இயல்கள், அதிகாரங்களாக பகுக்கப்பட்டுள்ளது.

  • அறத்துப்பால்: பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
  • பொருட்பால்: அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல்
  • காமத்துப்பால்: களவியல், கற்பியல்

தமிழ் இலக்கிய பாகுபாடு

[தொகு]

இலக்கியம் தோன்றிய காலம் கொண்டும், அதன் உள்ளடக்கம் கொண்டும், "பிறமொழியர் அறிந்துகொள்வதற்கு ஏற்ற வகையிலும்" தமிழ் இலக்கியங்கள் பின்வருமாறு பாகுபடுத்துவல் உண்டு.

பழங்காலம்
சங்க இலக்கியம் (கி.மு. 500 - கி.பி. 100)
நீதி இலக்கியம் (100 - 500)
இடைக்காலம்
பக்தி இலக்கியம் (600 - 900)
காப்பிய இலக்கியம் (900 - 1200)
உரைநூல்கள் (1200 - 1500)
புராண இலக்கியம் (1500 - 1800)
இக்காலம் (1800 - 2006)
  • சங்க காலம்
  • சங்கம் மருவிய காலம்
  • பக்தி இலக்கிய காலம்
  • இடைக்காலம் காலம்
  • இக்காலம்

இலக்கிய நூல்வகைகள்

[தொகு]
  • கலம்பகம் - "பலவகைப் பொருள்பற்றி வெவ்வேறு செய்யுள் வகைகளால் நூறு பாட்டுகள் அமைந்த நூல் கலம்பகம் எனப்படும்"
  • திருப்பள்ளியெழிச்சி - மன்னர்கள் நித்திரை விட்டு எழும் முன் இசையுடன் பாடப்படும் பாடல்கள்.
  • கோவை - "கோவை என்றால் பல செய்யுள்களை தொடர்பு உடையனவாக கோர்த்தல் என்பது பொருள்...நானூற் காதல் துறைகள்பற்றி நானூறு செய்யுள்களால் பாடப்படுவது..."
  • பரணி - "ஆயிரம் யானைகளை போர்க்களக்தில் கொன்று வெற்றியை நிலைநாட்டிய வீரன் ஒருவனை புகழ்ந்து பாடுவது பரணி"
  • உலா - கடவுளோ, முக்கிய நபர்களோ வீதியில் உலா வரும்போது பாடப்படும் பாடல்கள்.
  • தூது - இயற்கை அம்சங்கள் மற்றும் பிற அம்சங்கள் காதலர்களுக்கிடையே தூது செல்வது போல் அமையும் பாடல்கள் (எ.கா. தமிழ்விடுதூது).

(துணை நூல்: மு. வரதராசன் அவர்களின் "தமிழ் இலக்கிய வரலாறு")

உரையாடல்

[தொகு]

Earth Sciences தமிழ் என்ன?

[தொகு]

--Natkeeran 12:30, 24 பெப்ரவரி 2006 (UTC)

பல இடங்களிலும் தேடிப்பார்த்தேன் தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களின்படி பார்க்கும்போது, நேரடியாகப் புவி அறிவியல்கள் என்றே மொழிபெயர்க்கலாம் போல் தோன்றுகிறது. Mayooranathan 13:44, 24 பெப்ரவரி 2006 (UTC)


புவி + அறிவியல் -- => புவியியல் ??--Natkeeran 13:54, 24 பெப்ரவரி 2006 (UTC)


புவியியல் = புவி + இயல் , இங்கே இயல் என்பது தற்கால அகரமுதலிகளின்படி fields of study ஐக் குறிக்கும். (கீழே பார்க்கவும்).
இயல் (p. 9) [ iyal ] -- nature; literary Tamil (prose and poetry, not drama); -ology: the formative for all sciences and fields of study
Source: McAlpin, David W. A core vocabulary for Tamil. Rev. ed. Philadelphia, Pa.: Dept. of South Asia Regional Studies, University of Pennsylvania, 1981. The data for this dictionary was most recently updated in October 2004.
எனவே புவி பற்றிய fields of study புவியியல்.
அறிவு = knowledge ஆனால் அறிவியல் என்பது science என்பதைக் குறிக்கிறது.
புவி + அறிவியல் = புவி அறிவியல்
இதே போல்தான்
சமூகம் + இயல் --> சமூகவியல் (sociology)
சமூகம் + அறிவியல் --> சமூக அறிவியல் (social science) என்றாகிறது.
Mayooranathan 14:32, 24 பெப்ரவரி 2006 (UTC)