பேச்சு:ఆధారము లేని

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ఆధారము లేని என்னும் சொல்லுக்குத் தரப்பட்டிருக்கும் தமிழ் அர்த்தம் தவறு...அதாரம் அல்லது சார்புநிலை (ఆధారము--ஆதாரம்) இல்லாத (లేని-இல்லாத) என்பதே சரியானப் பொருள்...முதலில் இதை ஒரு தனிச்சொல்லாகவே கருதக்கூடாது...ஏனென்றால் இதே முறையைக்கொண்டு பல்லாயிரக்கணக்கானச் சொற்களை தேவையில்லாமல் தனிச்சொல் போலத் தோன்றுமாறு உண்டாக்கலாம்...எ.கா..அழகில்லாத, கோபமில்லாத, நிதானமில்லாத, நிறமில்லாத, வேகமில்லாத போன்றவை...இவையெல்லாம் தனிச்சொற்களல்ல...Indo Wordnet தவிர இந்தச்சொல் வேறு அகராதியில் இல்லை... ఆధారములేని என்று இரு சொற்களயும் சேர்த்துப்போட்டுப் பார்த்தால் Indo Wordnet சரியான பொருளையேத் தருகிறது... [[1]]--Jambolik (பேச்சு) 18:01, 30 மார்ச் 2014 (UTC)

இடைவெளி இல்லாவண்ணம் சொற்களை நகர்த்தினால், சரியான பொருள் வரும் என்று கூறுகிறீர்கள். அப்படியானால், இப்பக்கத்தினை அது போல நகர்த்த வேண்டுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:23, 4 ஏப்ரல் 2014 (UTC)
  • இது ஒரு தனிச்சொல் அல்ல என்றுக் கூறினேன்...இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளும் சரியல்ல...சரியான அர்த்தம் ஆதாரம்/மூலம்/அடிப்படை/பிடிமானம்/பிடிப்பு/அஸ்திவாரம் இல்லாத என்பது ஆகும்...இத்தகையச் சொற்களை உண்டாக்கிக்கொண்டே போகலாம்...அது இல்லாத, இது இல்லாத என்று...ஆகவே இந்தப்பக்கத்தையே நீக்கிவிடலாம் என்பதே என் எண்ணம்...--Jambolik (பேச்சு) 17:56, 4 ஏப்ரல் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ఆధారము_లేని&oldid=1230430" இலிருந்து மீள்விக்கப்பட்டது