பேச்சு:చీపురుకట్ట

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

చీపురుకట్ట:
துடப்பம்

பொருள்[தொகு]

  • చీపురుకట్ట, பெயர்ச்சொல்.
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. துடப்பம்
  2. துடைப்பம்
  3. துடப்பக்கட்டை

விளக்கம்[தொகு]

  • பொதுவாக வீட்டை கூட்டி சுத்தம் செய்ய, இந்த துடைப்பம் என்ற பாரம்பரியப் பொருளை, இந்திய வீடுகளில் பயன்படுத்துகின்றனர். வீ்ட்டு வாசலைச் சுத்தம் செய்ய ஒரு வகை விளக்குமாறும்/துடைப்பமும், வீட்டிற்குள் வேறு வகை துடைப்பமும் பயன்படுத்தப் படுகின்றன. பயன்பாட்டிற்கு ஏற்ப அதன் அளவும் வேறுபடுகின்றன.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చీపురుకట్ట--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +


  • மேற்கண்ட வடிவிலேயே அமைத்தால், பல சொற்களை மேம்படுத்துதலுக்கும், தானியங்கி செயற்பாட்டிற்கும் மிகவும் உதவியாக இருக்கும். இதுவே சரி என்று கூறவில்லை. சுய அறிவு இல்லாத தானியங்கிக்கு, இந்த வரிக்கு இது என்று கூறித் தருதல் எளிமை. இது மட்டுமல்ல. பொதுவாக அனைத்து வார்புருக்களும் அனைத்து இடங்களிலுல் வராது. அவை பயன்படாத / வராத இடங்களில் வெற்றுவரியாக இட்டு விடுக. இதுவே என் எண்ணங்களாக இருக்கின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்களில் பலரின் உழைப்பும், கலந்துரையாடல்களும் இருக்கின்றன. இது ஒரு கூட்டு முயற்சி என்பதற்கும் இது எடுத்துக்காட்டாக இருக்கும். எம்மொழி சொல்லுக்கும், இது பொருந்தும். மற்றவை உங்கள் எண்ணம் கண்டு. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:34, 7 நவம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]
  • நன்றி தகவலுழவன்..மேற்கண்ட வடிவமைப்பு மிக எளிமையாக, இலகுவாக மற்றும் அழகாக உள்ளது...'சொற்பிறப்பு' என்பதின் கீழ் ஒரு சொல்லுக்கு எந்த மொழி மூலம் எ.கா., சமசுகிருதம் என்று கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்...சரியா?..ஏதாவது விளக்கம் தருவதாக இருந்தால் =விளக்கம்= என்று ஒரு வார்ப்புரு 'பொருள்' என்பதின் கீழே உருவாக்கிக் கொள்ளலாமா?..எம்மொழிச் சொல்லுக்கும் பொருந்தும் என கூறியிருப்பதால், இந்த வடிவமைப்பையே தமிழ்ச் சொற்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே என் எண்ணம்...--Jambolik (பேச்சு) 23:25, 7 நவம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]
  • சொற்பிறப்பியல் = மூலம் என்ற உங்களின் கூற்று சரியே. விளக்கம் என்பதை மேலுள்ள படி பயன்படுத்தக் கோருகிறேன், ஏனெனில், நமது தட்டச்சு பலகையிலேயே உள்ள எளிமையான குறியீடுகளே போதும். அதுவே நமது மீடியாவிக்கி மென்பொருளின் சிறப்பு ஆகும். பிற மொழி விக்சனரியைப் போலவே, நாமும் அதே நடைமுறை தான் பின்பற்றுகிறோம். அதாவது தமிழ் விக்சனரி என்றால் தமிழில் விளக்கம் எம்மொழிச்சொல்லுக்கும் இருக்க வேண்டும். அது தமிழ்ச்சொல்லாகவே இருந்தாலும், தமிழ் விளக்கம் தரப்பட வேண்டும். மொழிபெயர்ப்புகள் என்பது தமிழ்ச்சொல்லுக்கு மட்டுமே வரும். தெலுங்கில் இருந்தோ அல்லது கன்னட மொழியில் இருந்தோ சொற்கள் உருவாக்கப்படும் போது, மொழிபெயர்ப்புகள் தேவையில்லை என்பது தங்களுக்கும் தெரிந்த நடைமுறை ஆகும். தொடர்ந்து நுணுக்கமாக, சொற்களை படங்களுடன் விரிவாக்கி வருவதற்கு மிக்க நன்றி. தங்களைப் போல, நானும் அவ்வப்போது உருவாக்குவேன்.. ஓங்குக தமிழ் வளம்! வாழிய தமிழர் நலம்!! வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:16, 9 நவம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]
  • 'சொற்பிறப்பியல்' என்னும் பத்திக்குக்கீழ் ஒரு சொல்லின் மூலம் எந்த மொழியில் இருக்கிறது/அந்தச் சொல் எம்மொழிலிருந்து வந்தது என்று அந்தந்த மொழியின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானதா எனும் பொருளில் வினவியிருந்தேன்.

--Jambolik (பேச்சு) 12:38, 9 நவம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:చీపురుకట్ట&oldid=1261958" இருந்து மீள்விக்கப்பட்டது