உள்ளடக்கத்துக்குச் செல்

பொடித்தூவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொடித்தூவல்:
கறி--பலவகை இந்தியக் கறிகள்
பொடித்தூவல்:
கறி--வெண்டைக்காய்
பொடித்தூவல்:
கறி--வாழைக்காய்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பொடித்தூவல், பெயர்ச்சொல்.
  1. ஒருவகை மரக்கறி யுணவு (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A kind of vegetable curry

விளக்கம்

[தொகு]
  • பொடித் தூவி கறி சமைப்பது என்பது ஒருவகைச் சமையல் முறையாகும்...தற்காலத்தில் பொடிப் போட்டக் கறி(-யமுது) என்பர்...காய்கறித் துண்டுகளை, எண்ணெயில் தாளிதம் செய்து வதக்கி, வெந்தவுடன் கறிப்பொடி எனப்படும் பொடியைத் தூவிப் புரட்டியெடுத்து உண்பர்...பொதுவாக உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வத்தல் மிளகாய், கொத்துமல்லி விதைகள்,பெருங்காயம் ஆகியவைகளை எண்ணெயில் வறுத்து, பொடித்து வைத்துக்கொள்வர்...கறிகளுக்கு மணமும், சுவையும் கூட்ட இந்தப்பொடியை வெந்தக் கறிகளின் மீதுத் தூவிப் புரட்டி எடுப்பர்...பலவகை மணம், சுவைகளையூட்ட வகைவகையானக் கறிப்பொடிகள் உபயோகத்திலிருக்கின்றன...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொடித்தூவல்&oldid=1458408" இலிருந்து மீள்விக்கப்பட்டது