பொதும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதும்பு:
சோலை
பொதும்பு:
குறுங்காடு
பொதும்பு:
மரப்பொந்து
பொதும்பு:
குகை--குகையின் உள்ளிலிருந்து வெளிப்புறக் காட்சி
(கோப்பு)
 • பொது¹-+

பொருள்[தொகு]

 • பொதும்பு, பெயர்ச்சொல்.
 1. சோலை
  (எ. கா.) காந்தளம் பொதும்பில் (அகநா. 18).
 2. குறுங்காடு
  (எ. கா.) முல்லையம் பொதும்பின் (சீவக. 3042). .
 3. மரப்பொந்து (பிங்.
 4. குழி
  (எ. கா.) பொதும் பினில் வீழ்ந்து வழுக்கி (திவ். பெரியாழ். 5, 2, 7). .
 5. குகை

பொதும்பு =குகை எ. கா) கைவிடா நின்றதுவும் கற்பொதுவில் காத்ததுவும் -திருமுருகாற்றுப்படை /வெண்பா

 1. (எ. கா.) மேருவின் பொதும்பில் (கம்பரா. மீட்சிப். 325).
 2. பூஞ்சோலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. grove
 2. shrubby jungle
 3. hole, hollow in a tree
 4. pit
 5. cave

இலக்கியமை[தொகு]

பொதும்பு - தளிர் கவின் எய்திய தண் நறும் பொரும்பில் நற்றிணை 118
நீர்நாய் தில்லையம்பபொதும்பில் பள்ளிகொள்ளும் நற்றிணை 195
மாஆஅத்துப் பொதும்புதொறும் குயில் நற்றிணை 243
பாலை புலி பொறி அன்ன புள்ளியம் பொதும்பில் பனிப்பவர் மேய்ந்த காரான் நற்றிணை 391
பழந்தூங்கு நளிப்பின் காந்தளஞ் சிலம்பு அகம் 18
உயர்சினைப் பொதும்பில் புன்னை அகம் 190
வள்ளை நீடிலைப் பொதும்பில் யாமை அகம் 256
புன்னையம் பொதும்பு அகம் 340
பாலை இரும்பை அழல் அகைத்தன்ன அங்குழைப் பொதும்பு அகம் 351


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதும்பு&oldid=1892717" இருந்து மீள்விக்கப்பட்டது