மடிச்சீலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

மடிச்சீலை:
மடியில் கட்டிக்கொள்ளும் பணப்பை இத்தகையதே!
மடிச்சீலை:
என்றால் கோவணம்..இவர் அணிந்திருப்பது கோவணம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மடிச்சீலை, பெயர்ச்சொல்.
 • (மடி+சீலை)
 1. ஆசாரவஸ்திரம்
 2. மடியிற் கட்டிக்கொள்ளும் பணப்பை
  (எ. கா.) மடிச்சீலை கொட்டித் தாராதவரார் (விறலிவிடு. 117)
 3. கோவணம் (உள்ளூர் பயன்பாடு)

விளக்கம்[தொகு]

 • ஆசாரவஸ்திரம் என்பது குறிப்பாக அந்தணர்கள் அன்றாடம் பயன்படுத்தும் தம் வேட்டி, உத்தரீயம், புடவை போன்ற ஆடைகளைக் குளிப்பதற்குமுன் துவைத்து, பிறர் நடமாட்டம் இல்லாத இடங்களில் உலர்த்துவர்...பிறகு குளித்தபின் அரையில் ஈரத்துணியோடு வந்து உலர்ந்த ஆடைகளை எடுத்து அணிந்துக்கொண்டு பூசை, சமையல் போன்ற வேலைகளைக் கவனிப்பர்...துணிகள் உலருங்கால் எவரும் அவற்றின் அருகில் சென்று அவற்றின் மீது பட்டுவிடாமல்/அவற்றைத் தொட்டுவிடாமல் மிகக் கவனமாக இருப்பர்...அந்தணக் குலத்தையே சார்ந்தவர்களாக இருந்தாலும், குளித்து, ஆசாரவஸ்திரம் அணிந்துக்கொள்ளமல் எவரும் இவர்களுடையத் துணிகளின்மீதுப் பட்டு/தொட்டுவிடக்கூடாது....இவ்வாறு மிகக் கவனமுடன் துவைத்து, பத்திரப்படுத்தப்பட்ட ஆடைகளே ஆசாரவஸ்திரம் எனப்படும்...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. ceremonially pure cloth
 2. purse kept in thegirdle
 3. forelap( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடிச்சீலை&oldid=1281151" இருந்து மீள்விக்கப்பட்டது