மானாங்காணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மானாங்காணி (பெ)

  1. யோசனையின்மை. மானாங்காணியாய்ப் பேசுகிறான்.
  2. ஒழுங்கீனம். பண்டங்களெல்லாம் மானாங்காணியாய்க் கிடக்கிறது.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. inconsiderateness, thoughtlessness
  2. carelessness, disorderliness
விளக்கம்
பயன்பாடு
  • வவெசு அய்யர் கம்பனையும் ஷேக்ஸ்பியரையும் ஒப்பிட்டிருக்கிறார். ஆனால் வ.ரா போன்றவர்கள் ‘மானாங்காணியாக’ ஒப்பிடப்போக கடுப்பான புதுமைப்பித்தன் இவ்வாறு எழுதினார்: ‘ஏன் அது மேல்நாட்டுடன் ஒப்பிடவேண்டிய காரியமோ தெரியவில்லை. நம்மூர் நாயர் ஓட்டல் இட்லியையும் பரமசிவம்பிள்ளை ஓட்டல் தோசையையும் ஹட்ஸின் பாமர்ஸ் பிஸ்கோத்துடன் ஒப்பிட்டு எளிவரும் கருத்துக்களைக் காணப்பெறும் பாக்கியம் எனக்கு இதுவரை சித்திக்கவில்லை’(ஒப்பிலக்கியம், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மானாங்காணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :யோசனையின்மை - ஒழுங்கீனம் - மேலோட்டம் - கவனக்குறைவு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மானாங்காணி&oldid=1199594" இலிருந்து மீள்விக்கப்பட்டது