மூலத்தானம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---मूल + स्थान--மூல + ஸ்தா2ந--மூலஸ்தா2ந --மூலத்தானம்
பொருள்
[தொகு]- மூலத்தானம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- base, foundation
- sanctum sanctorum of a temple
- idol of deity fixed in the sanctum sanctorum
- royal residence, palace
விளக்கம்
[தொகு]- இந்துக் கோவில்களில் அந்தந்த தெய்வங்களில் கற்சிலைகள் உயிர்ப்பித்தல்--ப்ராண ப்ரதிஷ்ட்டை என்னும் முறையால் நிறுவப்பட்டிருக்கும் அறைதான் மூலத்தானம் எனப்படுகிறது...இந்தச் சிலாவிக்கிரகங்களுக்கு மூலவர் என்றுப்பெயர்...இவருக்கு நித்திய ஆராதனைகள்/உபசாரங்கள்/பூசைகள் நடத்தப்படும்...உற்சவக் காலங்களில்/மற்ற நாட்களில் மக்களின் பொது தரிசனத்திற்காக மூலத்தானத்தைவிட்டு மூலவரை வெளிக்கொணர முடியாது...அதனால், அதே தெய்வத்தின் உற்சவர் என்றழைக்கப்படும் நகர்த்தக்கூடிய/சுமக்கக்கூடிய உலோக விக்கிரகத்தையும் உயிர்ப்பித்து அங்கு வைத்திருப்பார்கள்...உற்சவ விக்கிரகத்தை மூலத்தானத்தின் உள்ளே அல்லது வெளியே வைத்திருக்கலாம்...பல பெரிய இந்துக் கோவில்களின் மூலத்தானத்திற்குள் செல்ல பூசாரிகள்/அர்ச்சகர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை...நிழற்படம் எடுக்கவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்
- அடிப்படை, அரசிருக்கை அதாவது அரசர்கள் வாழுமிடமான அரண்மணை ஆகியவற்றையும் இந்தச்சொல் குறிக்கும்......