மைந்தன்
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மைந்தன், பெயர்ச்சொல்.
- மகன் (பிங். )
- இளைஞன் (பிங். )
- விலங்கு ஊர்வனவற்றின் குட்டி
- மாணாக்கன்
- (எ. கா.) அளவிலா மைந்தர்க் கூட்டி (திருவாலவா. 35, 4).
- ஆண்மகன் (பிங். )
- திண்ணியன் (சூடாமணி நிகண்டு)
- வீரன்
- கணவன்
விளக்கம்
[தொகு]- மைந்தன் என்பது மகன் என்ற பொருளைத்தரும்.மைந்தன் என்றால் பலம் மிக்கவன்/வலு உள்ளவன், திண்ணியன் என்று பொருள்... தமிழ் இலக்கியமான
புறப்பொருள் வெண்பாவில்
"பைந்தொடி மேல்உலகம் எய்தப் படர்உழந்த மைந்தன் குரிசில் மழைவள்ளல் - எந்தை தபுதாரத்து ஆழ்ந்த தனிநிலைமை கேளாச் செவிடாய் ஒழிக என் செவி"
என்னும் பாடலில் மைந்தன் என்னும் சொல் வந்துள்ளது, இதில் மைந்தன் என்னும் சொல் ஆடவர் அல்லது கணவர் என்பதை குறிக்கின்றது.. மைந்தன் என்பது ஆண்மகனைக் குறிக்கும்,மகன் என்பதற்கு மகள் என்று பெண்பால் சொல் உள்ளதைப்போல், மைந்தனுக்கு பெண்பால் சொல் கிடையாது,...மைந்தன் என்றால் தன் பெற்றோர் மட்டுமன்றி உறவினர், ஆசான், சுற்றத்தார் குடும்பங்களையும் பெற்றோருக்கு நிகராக நடத்துபவன் என்று பொருள்...இதுமட்டுமல்லாது மேற்கண்டவாறு பற்பல அர்த்தங்களையுமுடையச் சொல் மைந்தன்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- son
- young man
- young of an animal or reptile
- disciple, pupil
- man
- strong, powerful man
- warrior, hero
- husband
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளுள்ளவை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- கம்பரா. உள்ள பக்கங்கள்
- பரிபா. உள்ள பக்கங்கள்
- திருவாலவா. உள்ள பக்கங்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- பு. வெ. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- நான்கெழுத்துச் சொற்கள்
- உறவுச் சொற்கள்
- உயிரினங்கள்