யாணர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

யாணர், (பெ)(வி)()

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. novelty
  2. fertility
விளக்கம்
  • யாணர் என்னும் உரிச்சொல்லை அடிச்சொல்லாகக் கொண்டு யாணர்த்து என்னும் வினைச்சொல்லும், யாணர் என்னும் பெயர்ச்சொல்லும் தோன்றின.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பெயர்ச்சொல்
அதிரா யாணர் முதிரத்துக் கிழவ - புறநானூறு 158-25
  • வினைச்சொல்
யாணர்த்து - நற்றிணை 38, புறநானூறு 42-12
  • உரிச்சொல்
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன (புறநானூறு 174)

வளனமான பழுத்த மரம் என்ற பொருளில் மரத்தின் தன்மையைக் கூறுவதால் உரிச்சொல் ஆயிற்று.

(இலக்கணப் பயன்பாடு)
  • புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி - தொல்காப்பியம் 2-8-82



( மொழிகள் )

சான்றுகள் ---யாணர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாணர்&oldid=1020871" இலிருந்து மீள்விக்கப்பட்டது