வண்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

வண்மை(பெ)

 1. ஈகை
 2. குணம்
 3. அழகு
 4. வாய்மை
 5. வளமை; வளப்பம்
 6. வலிமை
 7. புகழ்
 8. வாகைமரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. bounty, liberality
 2. quality, property, nature
 3. beauty; truth
 4. fruitfulness, fertility, abundance
 5. strength
 6. praise, reputation
 7. sirissa
பயன்பாடு
 • வண்மை என்பது வளத்தைக் குறிப்பது. வழங்குதலையும் குறிக்கும். அஃதாவது வள்ளல் தன்மை வண்மை எனப்படும். "வறுமையின்மையால் வண்மையில்லை கோசலத்தில்' என்பான் கம்பன். (வண்மையில்லை நேர் வறுமையின்மையால்) வன்மையும் வண்மையும் உடையதாக ஒருநாடு திகழுமாயின் அது நன்னாடு ஆகும்.
 • வன்மை என்பது வலிமையாகும். உடல் வன்மை வேண்டும் என்போம். சொல்வன்மை, அனைத்து வன்மையிலும் உயர்ந்தது என்று சொல்லுவோம். வன்மை, வலிமை, வல்லமை எல்லாம் ஒன்றே. வல்லரசு நாடுகள் என்றால் போர் வன்மை மிக்க நாடுகள் எனப் பொருளன்றோ? *(மொழிப் பயிற்சி - 27 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 20 பிப் 2011)

(இலக்கியப் பயன்பாடு)

 • வண்மையு மன்ன தகைத்து(நாலடி. 269)
 • ஈது . . . கருமஞ்செய்வார் வண்மை (திருவாத. பு. திருப்பெருந். 93)
 • வாராதொழியா னெனும்வண்மையினால் (கம்பரா. உருக்காட். 6)

(இலக்கணப் பயன்பாடு)

ஒலிநயங்கள்[தொகு]

எதுகை நயம்[தொகு]

வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவீரென்
னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார்
கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற
லெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.

இச்செய்யுளில் வண்மை, உண்மை, கண்மை, எண்மை என்று அடிதோறும் முதற்சீர் சுவையாக வந்துள்ளமையைக் காண்க.

சொல் நயம்[தொகு]

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வண்மை&oldid=1243085" இருந்து மீள்விக்கப்பட்டது