வாய்மை
Jump to navigation
Jump to search
பொருள்
வாய்மை, பெயர்ச்சொல்.
- சொல்
- தப்பாத மொழி
- உண்மை
- வலிமை
- துக்கம். துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் என நால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- உண்மை, வாய்மை, மெய்ம்மை. இம்மூன்றும் ஒன்று போலத் தோன்றும் சொற்கள். ஆனால் வேறுபாடு உண்டு. இம் மூன்றாலும் மனிதன் தவறின்றி வாழ வேண்டும். இதனை "மன, மொழி, மெய்களால் தவறாது நடப்பேன்' என்று உறுதி கொள்ள வேண்டும் எனச் சான்றோர் உரைத்தனர். (மனோ, வாக்கு, காயம் என்பது வடமொழி) உள்ளத்தில் பொய்யின்றி ஒழுகுதல் உண்மை, உள்ளத்தில் உள்ள உண்மை மாறாமல் வாய் வழியாக- சொல்லாக- பேச்சாக வெளிப்படுவது வாய்மை. வாய்மை மொழி மாறாமல் நடப்பது மெய்ம்மை (மெய்- உடம்பு- செயற்படுதல்)
- உள்ளத்தில் இருப்பது உண்மை.
- வாய்வழி வருவது வாய்மை.
- மெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை
(பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்! கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 29 மே 2011)
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும்(தனிப்பா. i, 97, 19.)
- பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித். 35).
- வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291).
- ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாய்மை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற