உள்ளடக்கத்துக்குச் செல்

வலித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
 • வலித்தல், பெயர்ச்சொல்.
 1. செய்யுள்விகாரம்
  (எ. கா.) ஆறனுள் மெல்லொற்றை வல்லொற்றாக மாற்றுகை (நன். 155.)
 2. பலவந்தப்படுத்துதல்
  (எ. கா.) வலித்தாண்டு கொண்ட (திருவாச. 11, 7)
 3. பற்றிக்கொள்ளுதல்
  (எ. கா.) கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே (அகநா. 76)
 4. இடர்ப்பட்டுப்பொருள் கொள்ளுதல் (W.)
 5. அழுத்தி யுச்சரித்தல் (W.)
 6. மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல்
  (எ. கா.) வலிக்கும் வழி வலித்தலும் (தொல். சொல். 403)
 7. துணிதல்
  (எ. கா.) வல்வினை வயக்குதல் வலித்திமன் (கலித். 17)
 8. வற்றச்செய்தல் (W.) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை) .z
 9. திண்ணியதாதல்
  (எ. கா.) கல்லென வலித்து நிற்பின் (கம்பரா. வருண. 84)
 10. வற்றுதல்
  (எ. கா.) நீர்நுங்கின் கண்வலிப்ப (புறநா. 389)
 11. நோவுண்டாதல்
  (எ. கா.) வலிக்கின்றது. சூலை தவிர்த்தருளீர் (தேவா. 946, 7)
 12. முயலுதல் (W.)
 13. கொழுத்தல் (திவா.)
 14. சொல்லுதல் (சூடாமணி நிகண்டு)
 15. ஆலோசித்தல்
  (எ. கா.) வலியா தெனக்கு வம்மி னீரென(பெருங். வத்தவ. 3, 99) (பிங். )
 16. கருத்தோடுசெய்தல்
  (எ. கா.) திங்கள் வலித்த காலன் னோனே (புறநா. 87)
 17. உடன்படுதல் (பிங். )
  (எ. கா.) செல்லல் வலித்தேனச் செம்மன்முன் (பு. வெ. 11, பெண்பாற். 12)
 18. இழத்தல்
  (எ. கா.) புலித்தோல் வலித்து வீக்கி (தேவா. 910, 3)
  (எ. கா.) சார்ங்கம் வளைய வலிக்கும் (திவ். நாய்ச். 5, 8)
 19. வளைத்தல் (சூடாமணி நிகண்டு)
 20. அழகுகாட்டுதல் (திருநெல்வேலி வழக்கு)
 21. தண்டாற் படவு தள்ளுதல்
 22. கப்பற்பாய் தூக்குதல்
 23. புகை குடித்தல்(உள்ளூர் பயன்பாடு) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
 24. இசிவு காணுதல்
 25. ஏங்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
 • ஆங்கிலம்
 1. (இலக்கணம்) A poetic licence which consists in the change of a soft consonant into a hard one, one of six ceyyuḷ-vikāram, ( ← இதைப் பார்க்கவும்)
 2. To force, compel
 3. To seize
 4. To Strain, as an interpretation
 5. To stress, as words (இலக்கணம்)
 6. To become hard in sound, as a soft consonant
 7. To decide
 8. To dry, scorch, parch
 9. To become hard
 10. To become dry
 11. To ache; to be painful
 12. To make efforts
 13. To become stout
 14. To say, tell,
 15. To narrate
 16. To think, consider
 17. To Execute with undivided attention, as a work
 18. To agree to, consent to
 19. To draw, pull; to attract
 20. To bend, curve To mimic
 21. To row, tug
 22. To hoist, as the sails of a vessel
 23. To smoke, as tobacco
 24. To have contortions or convulsions
 25. To pine, droop, languish


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலித்தல்&oldid=1340105" இலிருந்து மீள்விக்கப்பட்டது