வார்ப்புரு பேச்சு:புது-தமிழ்-பெ-வார்-படிவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புது-தமிழ்-பெ-வார்-படிவம் (பெ)

பொருள்


என்பதை விட,


பொருள்

புது-தமிழ்-பெ-வார்-படிவம் (பெ)


என்பதே சிறப்பாகப் படுகிறது.

1)ஏனெனில், பொருள் என்பது பல்பொருள் ஒரு மொழி என்றே நீங்கள் உட்பட பலரும் சொல்லுகின்றனர். பெயர்சொல் என்பதும் சொல்லின் பொருள் தானே. அப்படியிருக்க பொருளுக்கு வெளியே, பெயர்ச்சொல் என்பதை இடுவது எனக்கு உகந்ததாகப் படவில்லை. 2)பொருள் -என்ற தலைப்புக்கு மேலேயே இடுவதால், அதற்கு மேலேயும் அதேச்சொல் படிவத்தில் இடுவதால் வருகிறது.

3)பெயர்ச்சொல் என்பதை இலக்கணப்பயன்பாட்டுக்கு மாற்றிவிட்டு, இருமுறை தலைப்பு வருவதைத் தவிர்க்கலாம்.

--த*உழவன் 17:29, 7 மார்ச் 2010 (UTC)

பொதுவாக அகராதிகளில் (ஆங்கில அகராதிகளில்), சொல்லைக் கொடுத்து அதன் அருகே அதன் இலக்கண வடிவைக் குறிப்பர். சொல்லின் வடிவம் தலைப்பில் இருந்தாலும் அது தொடர்ந்து படிக்கும் பொழுது, பெயர்ச்சொல், வினைச்சொல் என்று குறிக்கப்பெரும் பொழுது அருகில் இல்லாமல் இருப்பது சரியாக இல்லை. இலக்கண வடிவம் சொல்லின் அருகே தரப்பட வேண்டும். ஏனெனில் ஒரு சொல் தலைப்புச் சொல்லாக இருந்தாலும் அதன் இலக்கண வடிவம் மாறுபடலாம். கடை (வி), கடை (பெ), கடைய, கடந்து, என்றெல்லாம் வினையெச்சம், வினைமுற்று என்றெல்லாம் தர வேண்டியிருக்கலாம். சொல்லின் வடிவைத் தந்தபின் அடுத்து வரவேண்டியது ஒலிப்பு (இது தமிழ்ச்சொல்லுக்குத் தேவை இல்லை, பிறமொழிச்சொற்களுக்குத் தேவை) அதன் பிறகு வரவேண்டியது பொருள்.--செல்வா 18:29, 7 மார்ச் 2010 (UTC)

  • நீங்கள் தற்போது வடிவமைத்த சொல்லிலும், முன்பிருந்த வடிவத்திலும் சொல்லிற்கு அருகிலேயேதான் அதன் இலக்கணக் குறிப்பு இருக்கிறது. ஏன் இடமாற்றம்? இலக்கணக்குறிப்பைத் தருவதும், பொருளில் தானே அடங்கும். அப்படியிருக்க அந்த இடமாற்றத்தின் சிறப்பு யாது?த*உழவன் 18:46, 7 மார்ச் 2010 (UTC)
பொள், பொளி ஆகிய சொற்களைப் பாருங்கள். சொற்பொருள் தரும் இடத்தில் தலைப்புச் சொல் இருக்க வேண்டியதில்லை (பல பொருட்களும் ஒரு சொல்லுக்கு இருக்கலாம்), ஆனால் இலக்கண வடிவு சுட்டும் முன்னே அச்சொல் வடிவம் இருப்பது முக்கியம். பொள் (வி), பொள்ளு (வி) என்று இரண்டு வடிவும் குறிக்க வேண்டியிருக்கலாம். பொள்ள, பொள்ளி என்னும் வினையெச்ச வடிவங்களும் குறிக்க வேண்டியிருக்கலாம். சொற்கள் உள்ளிடும் பொழுது ஒவ்வொருமுறையும் மாற்ற வேண்டியிருந்ததால், வார்ப்புருவை நான் மாற்றினேன். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் முன்பிருந்தவாறே வார்ப்புருவை வைத்து விடுங்கள், நான் உள்ளிடும் பொழுது ஒவ்வொரு முறையும் நான் மாற்றிக்கொள்கிறேன். எனக்குப் பெரிய இடையூறு இல்லை; மேலும் நான் பயன்படுத்தும் வடிவத்தை ஒரு நோட்`பேடில் எழுதி சேமித்துப் பயன்படுத்த இயலும் (அல்லது மாற்று வார்ப்புரு ஒன்றைச் செய்தும் பயன்படுத்த முடியும்). இலக்கணக் குறிப்பு சொற்பொருள்களில் அடங்காது, சொல்லின் வகையைக் குறிக்கும். --செல்வா 02:07, 8 மார்ச் 2010 (UTC)
  • என் எண்ணங்கள்:பிடிக்கவில்லை என்று கூறி, நான் என் வளர்ச்சியையோ அல்லது தமிழ்விக்சனரி வளர்ச்சியையோ தடைசெய்து கொள்ள விரும்பவில்லை. ஒரு சாதாரண பங்களிப்பாளர் செய்திருந்தால், இவ்வளவு நேரம் கலந்துரையாடப் போவதில்லை. நீங்கள் என்னுடன் உரையாடற்செய்வது என் பேறு. அதனால் வினவினேன்.

தங்கள் உள்ளம் நோகும்படி ஏதேனும் உரைத்திருப்பின், வருந்துகிறேன். இம்மாணவன் செய்யும் தவறுகளைப் பொறுத்தருள்க. எனினும், எனது ஐயத்தை நான் யாரிடம் கேட்பது? இம்மாணவனின் கல்லாமை, ஏராளம். இவணின் கற்கும் திறனோ, ஆமைவேகம். இந்த வார்ப்புரு என்றால் என்ன? அதனை ஏன்பயன்படுத்த வேண்டும்? என்பதனைக் கற்றுக் கொள்ளவே எனக்கு 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் முழுமையாகக் கற்க வில்லை.

போன வருடமென்று நினைக்கிறேன். தமிழ் சொற்களுக்கு மேல் ===தமிழ்=== என்று தலைப்பிட்டிருந்தேன். அது ஏன் நீக்கப்பட வேண்டும். என்று சொல்லியிருந்தீர்கள். அதனை 90% நீக்கி விட்டேன். இது போல மாற்றணுமா? மாற்றாவிட்டால், பெரும் தவறு ஆகி விடுமா? என்ற எண்ணத்தில் தான் கேட்டேன். அனைத்து தமிழ், இந்தி சொற்கள் ஒரே வடிவத்தைப்பெற்றிருக்க வேண்டும் என்று என்னுள் எண்ணுகிறேன்.

த.உழவன், மனம் எல்லாம் நோகவில்லை.முதலாவது, நாம் யாவரும் ஈடானவார்கள் என்னும் நோக்கில் உரையாடல் வேண்டும். ஆசிரியர், மாணவர் என்றெல்லாம் இங்கு யாரும் கிடையாது. விக்சனரியின் செப்பமான வளர்ச்சியே நம் ஒவ்வொருவரின் முதலும் கடைசியுமான நோக்கமாக இருப்பது நல்லது. கருத்துகள் நன்னோக்கத்துடனே பகிர்கின்றோம். எனினும் சில நேரங்களில் ஒருவருக்கு உகப்பாகவும் எளிதாகவும் இருக்கும் ஓர் அமைப்பு மற்றொருவருக்கு வேறானதாக இருக்கலாம். எனவேதான் நான் அம்முறையைப் பரிந்துரைத்தேன். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னமே மறுமொழி இட்டுள்ளேன். பெயர்ச்சொல், வினைச்சொல் என்னும் குறிப்புகள்ள் சொல்லின் வகைப்பாடு. பொருள் அல்ல. பிறமொழிச்சொற்களுக்கு ஒலிப்பு என்பது ஒலிப்பாடு என்று வேண்டுமானால் சொல்லலாம் :)--செல்வா 02:45, 9 மார்ச் 2010 (UTC)

கலந்துரையாடல்(தொடர்ச்சி)

//சொற்கள் உள்ளிடும் பொழுது ஒவ்வொருமுறையும் மாற்ற வேண்டியிருந்ததால், வார்ப்புருவை நான் மாற்றினேன்.// எனக்கு இது புரியவில்லை?

தமிழக அரசுடனானக் கட்டுரைப் போட்டிகளில் கவனமாக இருப்பீர்களென்று நினைக்கிறேன். நீங்கள் இங்கு வரும் வரைக் காத்திருக்கிறேன். நான் புதுச்சொற்களை கடந்த ஒரு மாதமாக பதிவேற்றுவதில்லை. நம் விக்சனரியைச் சுற்றி வருகிறேன். அடுத்தவருடம் நம் விக்சனரியை, எண்ணிக்கை அடிப்படையில் முன்னேற்ற எண்ணம்.

அதற்கு முன், சொற்கட்டமைப்பில் ஆர்வம். அதனால்தான் உங்களைப் போன்றவருடன் உரையாடுகிறேன். இறுதியாக விக்சனரிக் குழுமத்தில், ஒருங்கிணைக்கப் பட்ட கருத்துகளை விவாதிக்க வேண்டும். நன்றி. என்றும் காத்திருக்கும்,த*உழவன் 05:50, 8 மார்ச் 2010 (UTC)

//எனக்கு இது புரியவில்லை? // -->நான் ஒவ்வொரு முறையும் {{PAGENAME}} {{பெ}} என்னும் பகுதியை வெட்டி, {{பொருள்}} என்னும் பகுதிக்கு முன்னே இட வேண்டி இருந்தது. சொல், சொல்லின் வகை, (பிறமொழி ஆயின்) சொல்லின் ஒலிப்பு முதலில் வருதல்வேண்டும், பின்னர் பொருள், விளக்கம், எடுத்துக்காட்டுகள், சொற்பிறப்பியல் முதலியன வரவேண்டும். இது என் தனிக் கருத்தல்ல. பல அகரமுதலிகளில் (எல்லா அகரமுதலிகளிலும் அல்ல) பின்பற்றப்படும் முறை. இது ஓர் ஒழுக்கத்துடன் வருவதாகவே எனக்கும் படுகின்றது. விக்சனரி, எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், பல்வேறு பிற கோணங்களிலும் அளவீடுகளிலும் ஒப்பற்ற ஓர் அரிய இணைய அகரமுதலியாக உருவாக முடியும். இன்னும் சில ஆண்டுகளிலேயே அப்படியான ஒரு வளர்ச்சி ஏற்பட பல கூறுகள் உள்ளன. உலக மொழிகளில் முதல் 10 இடத்திலோ, ஏன் முதல் இடத்திலோ கூட இருக்குமாறு செய்தல் கூடும். இது மிகையல்ல. பார்ப்போம் என்ன நடக்கின்றது என! --செல்வா 02:45, 9 மார்ச் 2010 (UTC)
  • இப்பொழுதே உங்கள் கருத்துக்களை உணர முடிந்தது. இவ்வளவு விரைவில் இவ்வளவு விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. நான் எதிர்பாரக்கவில்லை. கந்தசாமியவர்களும், தனிப்பட்ட உரையாடலில் உங்களைப் போன்றே இணைய அகராதிப்பக்கங்களுடன் எனக்குப் புரிய வைத்தார். உங்கள் அனைவருடனும் இருப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் உயர்வான நேரத்தை, எனது வளர்ச்சிக்கு பயன்படுத்தியதற்கு, உங்கள் இருவருக்கும் என்மனதார நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இதற்கு முன் தெரன்சும், இரவியும் என்னைத் தங்களுளியால் செதுக்கினர். பெரியண்ணனும் எனக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பி, நான் கேட்பவனவற்றிற்கு பதில் சொல்வார்.

எனக்குத்தேவையான பயிற்சி கொடுத்து ஓட விடுங்கள். விக்சனரியளவில் தமிழை முதல் மூன்று இடங்களுள் வருமாறு செய்யவேன். அதுவரை விக்சனரியை விட்டு விலகேன். த*உழவன் 14:50, 9 மார்ச் 2010 (UTC)

புரிந்துகொண்டமைக்கு நன்றி த.உழவன். நாம் எல்லோருமே பலரால் பலவாறு செதுக்கப்படுவர்கள்தானே. ஆனால் நாம் நம்மை உடையாமல் காக்கவேண்டுவது மட்டுமல்லாமல், நாம் மற்றவர்களால் மட்டும் செதுக்கப்படுவவர்கள் அல்லர். மற்றவர்களின் கருத்துகளை தேர்ந்து உள்வாங்கி தக்கவாறு உள்வளர்தல் வேண்டும். இது நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. மற்றவர்கள் ஊக்கம் தந்தாலும் பழித்தே உரைத்தாலும், இரண்டாலும் நாம் தக்கவாறு உள்வாங்கி, உள்கிளர்ந்து வேண்டியவாறு ஒளிவீச இயலும் ஐயா. எண்ணிய எண்ணியாங்கு எய்துபர். தமிழ் விக்சனரியின் உங்கள் ஆக்கங்கள் உழைப்புகள் நிலைத்து நிற்கும். நேர்மையுடன் மிகவும் பாராட்டி போற்றுவோர்களில் நானும் ஒருவன். நீங்களும் பழ.கந்தசாமி அவர்களும் பேராக்கம் தந்துவருகின்றீர்கள். வாழ்த்துகள்.--செல்வா 15:08, 9 மார்ச் 2010 (UTC)

முழுச் சொற்களையும் தருதல்[தொகு]

பெ என்று தருவதிலும் பார்க்க, பெயர்ச்சொல் என்று தருவதே நன்று. இங்கு இடம் சிக்கலில்லை, எனவே சுருக்கமாக தரமால், விரிவாகத் தருவதே நன்று. அப்படி வார்ப்புருக்களை நாம் மாற்றி அமைக்கலாமா? --Natkeeran 06:27, 2 ஆகஸ்ட் 2010 (UTC)


மேலும், வார்ப்புருக்களின் பெயர்களும் ஆங், பெ என்று அமையாமல், ஆங்கிலம், பெயர்ச்சொல் என்று அமைந்தால் கூடிய விளக்கமாக இருக்கும். எனக்கே இவ்வளவு குழப்புகிறது என்றால், பொதுப் பயனர்களுக்கு நிச்சியம் கடுமையான குழப்பாக இருக்கும். --Natkeeran 06:30, 2 ஆகஸ்ட் 2010 (UTC)


தற்போதைய சொல்வளம் வடிவம் - சில சிக்கல்கள்[தொகு]

  • ஆகக் கூடியது மூன்று சொர்களே!
  • மற்ற எல்லாவற்றுக்கு நாம் பட்டியல் போடும் வடிவில் இது இல்லை. புதுப் பயனர்களுக்கு குழப்பமாக இருக்கும்.

--Natkeeran 18:19, 31 ஜூலை 2010 (UTC)

எனக்கும் இது போன்ற பல குழப்பங்கள் எற்ப்பட்டன. ஆகையினால் இது போன்ற மாற்றம் அவசியம் --Inbamkumar86 18:47, 31 ஜூலை 2010 (UTC)

வரியமை, இலக்கியமை, இலக்கணமை[தொகு]

இவை வழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களா? புரியும்படி வார்ப்புருப் பெயர்கள் இருந்தால் நன்றல்லவா?

பயன்பாடு
இலக்கியப் பயன்பாடு
இலக்கணப் பயன்பாடு ?? இதன் கீழ் என்ன வரும்???

--Natkeeran 06:34, 2 ஆகஸ்ட் 2010 (UTC)


பக்கக் கூறுங்களின் வரிசை/ஒழுங்கு[தொகு]

தற்போதைய வடிவில் மொழி பெயர்ப்புகள் இரண்டாவதாக வருகிறது. ஆங்கில விக்கி மாதிரி அந்தச் சொல்லுக்கு முழு விளக்கமும் தருவது என்றால் அதற்குள்ளேயே உச்சரிப்பு, விளக்கம், பயன்பாடு என்று உள் கூறுகள் வரும். இது குளப்பாமாக உள்ளது. --Natkeeran 18:16, 31 ஜூலை 2010 (UTC)


எளிமையும், சீர்மையும்[தொகு]

பட்டியல்களே எளிமையாக மேலதிக தகவல்களை சேர்க்க உரிய வடிவம். ஆதாரங்கள், மற்றும் சொல்வளம் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முறை சிக்கலானது. எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களைச் சேர்க்க முடியாது. மூன்ற்றுக்கு மேற்பட்ட சொற்களைச் சேர்க்க முடியாது. அப்படி முடிந்தாலும், அவை தேவையற்றை சிக்கல் (complexity). தயவு செய்து பரிசீலிக்கவும். --Natkeeran 06:40, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்கிக் தலைப்புக் குறியீடுகளைப் பயன்படுத்தல்[தொகு]

நாம் தலைப்புகளுக்கு பொருத்தமான தலைப்புக் (சம ==) குறியீடுகளைப் பயன்படுத்தலே நன்றாக இருக்கும். --Natkeeran 16:18, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

  • நிறப்பட்டைகள் பயன்பாடு குறித்து நிரலாளர் மாகிர் கூறிய கருத்துக்களைக் கொண்டு, மறுசீராக்கம் செய்யவேண்டியது அவசியம்.
  • மாகிர் கூறியபடியும், நற்கீரன் கூறிய படியும், இருக்கிற வடிவமைப்பில், தொகு வசதியுள்ள சமக்குறியீடுகள் பயன்பாடும் வர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, தற்பொழுதுள்ள சமக்குறியில்லா <div>நிறப்பட்டைகளையும், அதற்கு முன் நிறமில்லாமல் இருந்த சமக்குறியீடு வசதியையும் இணைத்து, அதே எழுத்துரு அளவில் css-h5இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, இரண்டும் உள்ள வடிவமைப்பை நோக்கி நாம் நகரந்தால் சிறப்பாகும்.தங்கள் கருத்து வேண்டுகிறேன்.--06:34, 20 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..