வினையாலணையும் பெயர்
Appearance
பொருள்
வினையாலணையும் பெயர்
- தொழிலைச் செய்பவர்க்குப் பெயராக வருவது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- participial noun; finite verb used as noun
விளக்கம்
- வினையாலணையும் பெயர் = வினை + ஆல் + அணையும் + பெயர்
- வினையாலணையும் பெயர் காலம் காட்டும். தொழிற் பெயர் காலம் காட்டாது. தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, பால் (ஆண், பெண், பலர்) பாகுபாடுகள் இரா. வினையாலணையும் பெயரில் இவையுண்டு.
பயன்பாடு
- நேற்று வந்தவன் இன்றும் வந்தான். இத்தொடரில் வந்தவன் என்பது வினையாலணையும் பெயர். வந்தான் என்பது வினைமுற்று. வருதல் என்பது தொழிற்பெயர்.
- வருதல் ஆகிய வினையைச் செய்தவன் எனக் குறிக்க வேண்டுமாயின் வந்தவன் என்போம். இந்த வந்தவன் என்ற சொல் வினையால் அணையும் பெயர்.
- வந்தவன் எனும் சொல் வருதல் என்ற தொழிலைக் (வினையைக்) குறிக்காமல் வருதலைச் செய்த ஆளைக் குறிக்கிறது. வருதல் எனும் வினையால் தழுவப் பெற்ற பெயர் ஆதலின் இது வினையாலணையும் பெயராயிற்று.
- பாடினாள் - வினைமுற்று, பாடுதல் - தொழிற்பெயர், பாடியவள் - வினையாலணையும் பெயர்
- தேடியவன் - ஆண்பால் வினையாலணையும் பெயர்.
- நாடியவள் - பெண்பால் வினையாலணையும் பெயர்.
- வந்தவர்கள் - பலர்பால் வினையாலணையும் பெயர்.
- வென்றவர் விட்டதில்லை. விட்டவர் வென்றதில்லை. இதில் வென்றவர், விட்டவர் என்பவை வினையாலணையும் பெயர்கள் (Winners never quit. Quitters never win. வென்றவர் விட்டிலர். விட்டவர் வென்றிலர்)
- கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் இதில் கண்டவர், விண்டவர் என்பன வினையாலணையும் பெயர்கள்
(பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 3 ஏப்ரல் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வினையாலணையும் பெயர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- பொருட்பெயர் - இடப்பெயர் - காலப் பெயர் - சினைப் பெயர் - பண்புப் பெயர் - தொழிற் பெயர் - #