உள்ளடக்கத்துக்குச் செல்

விலகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

விலகு (வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. withdraw; leave - நீங்கு
 2. part from, separate from - விட்டு நீங்கு. அவனை விலகிப் போ.
 3. recede - பின்னிடு
 4. step aside and give way - ஒதுங்கு
 5. deviate from; go astray; err - ஒழுங்கு தவறு
 6. be dislocated; fall out of position - இடம்விட்டுப் பெயர்
 7. separate; get away - பிரி
 8. move - அசை விலகு குண்டலத்தன் (திவ். திருவாய். 8, 8, 1)
 9. proceed, go - செல் விலகுஞ் சில வேழம் (இரகு. யாகப். 19)
 10. be far off - தூரத்திலிரு
 11. be in periods - மாத விடாயாதல்.
 12. sparkle, shine - ஒளிவிடு
 13. throw, cast - எறி விலகிற் பிழையாச் சூலத்தே (தக்கயாகப். 224)
பயன்பாடு
 1. கூட்டமாய் நிற்காதீர்கள். விலகிப் போங்கள் - Don't crowd; move away.
 2. அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் - He stepped aside from the chief minister's position
 3. துஷ்டனைக் கண்டால் தூர விலகு (பழமொழி)- go far from an evil person
 4. வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது (பாடல்) - A tiger is coming out; run away

வார்ப்புரு:சென்னை பேரகரமுதலி

சொல்வளம்[தொகு]

விலகு - விலக்கு - விலக்கம் - விலகல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=விலகு&oldid=1913749" இலிருந்து மீள்விக்கப்பட்டது