ago
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்
[தொகு]ago
பொருள்
[தொகு]முன் (அல்லது) முன்னர் (அ) முன்பு (அ) முந்தி.
விளக்கம்
[தொகு]- இலக்கண விதிகள்
1.இந்தச் சொல்லினை, காலத்தினைக்(time) குறிக்கும் சொற்களுக்குப் பிறகே பயன்படுத்த வேண்டும்.
- ( எடுத்துக்காட்டு ) - சில வருடங்களுக்கு முன் (few years ago), நெடுநாட்களுக்கு முன்னர் (long ago).
2.இறந்த காலத்திற்குப்(after past tense) பிறகே பயன்படுத்த வேண்டும்.
- ( எடுத்துக்காட்டு ) - அம்மின்னஞ்சல், மூன்று நாட்களுக்கு முன்பு வந்தது. the mail came three days ago.
குறிப்பு - கீழே கொடுத்துள்ள வாக்கியங்களின் சொற்களை நன்கறிந்து,அவற்றின் நுண்ணிய வேறுபாட்டினை உணர்க.
- மூன்று ஆண்டுகளுக்கு முன், என் நண்பன் இறந்தான் - my friend died three years ago.
- அவன் இறப்பதற்கு முன்னர், நான்கு வருடங்களாக உடல் நிலை சரியில்லாமலிருந்தான் - he was ill for four years before he died.
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]before, for, from, since, a, go.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - தகுந்த இடங்களில் விளக்கப் பட்டுள்ளது.