dichotomy
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
dichotomy
- இருபிரிவு; இருபிரிவாகப் பிரித்தல்
- இருமை
- தாவரவியல். இணைக்கவர்படுதன்மை (இணைக்கிளை கொள்தன்மை); கவட்டுக் கிளைத்தல்
பயன்பாடு
- எப்போதுமே இருமைகளை (dichotomy) உருவாக்கிக் கொண்டு சிந்திப்பது சாமிநாதனின் பாணி. ..ஒரு பண்பாட்டுத் தளத்தில் அவர் விவாதத்திற்கு வரும்போது சாதகமான, படைப்புத்தன்மை உடைய ஓர் ஆற்றலை அடையாளம் காண்கிறார். படைப்புத்தன்மை இல்லாத எதிர்மறையான ஆற்றல் ஒன்றை வகுத்துக் கொள்கிறார். பின்னதைக் கடுமையாக எதிர்த்து முன்னதை விதந்தோதி முன்வைக்கிறார். மொத்தச் சூழலையுமே இவ்விரு ஆற்றல்களின் மோதல் களமாக உருவகித்துக் கொள்கிறார். (வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 3, ஜெயமோகன்)
- தன் தொடக்க நாட்களில் மரபிலக்கியம் x படைப்பூக்கம் என்ற ஒரு இருமையை உருவாகிக் கொண்டிருந்தார் சாமிநாதன். இப்போது மரபு x மரபிலிருந்து உருவான பரப்பியநோக்கு என்ற இருமையை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். (வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 3, ஜெயமோகன்)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dichotomy