eucharist
Appearance
ஆங்கிலம்
[தொகு]eucharist(பெ)
பொருள்
- (கிறித்தவ வழக்கில்) நற்கருணை, நன்மை, புனித நற்கருணை
- (இயேசு அருந்திய) இரா உணவு
விளக்கம்
- கிறித்தவ மக்கள் ஒன்றுகூடி இறைவேண்டல் செய்து, கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் இறைவல்லமையால் இயேசு கிறித்துவின் உடலும் இரத்தமுமாக மாறிட, அவற்றை உட்கொள்ளும் சடங்கு. இது ஒரு திருவருட்சாதனம்
- Eucharist என்னும் சொல்லின் வேர் கிரேக்க மொழியில் உள்ளது. கிரேக்கத்தில் εὐ (eu) என்றால் நல்ல என்பது பொருள். χάρις (charis, காரிசு) என்றால் அருள் என்பது பொருள். இதுவே தமிழில் நற்கருணை என்று பெயர்க்கப்பட்டது. εὐχαριστία (eukharistia)என்னும் கூட்டுச்சொல் நன்றியறிதல், நன்றி மன்றாட்டு எனப் பொருள்படும்.
பயன்பாடு
- இயேசு, "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்" என்றார் (யோவான் 6:54) திருவிவிலியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---eucharist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு