உள்ளடக்கத்துக்குச் செல்

mitochondrial eve

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

mitochondrial eve(பெ)

  1. ஆதித் தாய்; ஆதிப் பெண்
விளக்கம்
  1. முதலில் நடத்தப்பட்ட தற்கால மனிதர்களின் மணி இழைய (mitochondria) உயிரணு ஆய்வுப்படி (DNA analysis) அவர்கள் அனைவரும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரே பெண்ணில் இருந்து தோன்றியவர்கள் என்பதுபோல் தோன்றியது. அப்பெண் ஆதித் தாய் எனப்பட்டாள். மேலதிக ஆய்வுகளின்படி தற்கால மனிதர்கள் ஒரே தாய் என்பதற்குப் பதிலாக ஒரு சிறிய குழுவிலிருந்து தோன்றினர் என நம்பப்படுகிறது.
பயன்பாடு
  1. 160,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த ஒரு தாய்தான் என்னுடைய வம்சத்தின் ஆரம்பம். என்னுடைய வம்ச வழியை அப்படியே பின்னோக்கி 5000 தலைமுறைகள் தள்ளிக்கொண்டே போனால் அந்த தேடல் இந்த தாயாரில் கொண்டுபோய் சேர்க்கும். விஞ்ஞானிகள் இந்த தாயை ஆதித்தாய் Mitochondrial Eve என்று சொல்கிறார்கள். (ஆதித் தாய், அ.முத்துலிங்கம்)
  2. இன்றைய மனிதனின் குணாம்சங்கள் கொண்ட முதல் மனிதன் இவன். 40,000 ஆண்டுகள் கழித்து, அதாவது 160,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதே இடத்தில் ஓர் ஆதித்தாய் தோன்றினாள். இன்று உலகில் வாழும் அத்தனை மனித உயிரும் இந்த ஆதித்தாயில் இருந்தே தோன்றினர். (ஆதித் தாய், அ.முத்துலிங்கம்)

 :mitochondrial - eve - homo sapiens - genesis - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---mitochondrial eve--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=mitochondrial_eve&oldid=1770746" இலிருந்து மீள்விக்கப்பட்டது