transgressive fiction
Appearance
பொருள்
transgressive fiction(பெ)
- பிறழ்வெழுத்து
பயன்பாடு
- பிறழ்வெழுத்து [ Transgressive fiction ] என்ற சொல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவான ஒரு சில எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது. விமர்சகர் மைக்கேல் சில்வர்பிளாட் அச்சொல்லை உருவாக்கினார் என்கிறார்கள். பல்வேறு அக நெருக்கடிகளால் மனப்பிளவுண்டு சமூக நெறிகள் பொது நம்பிக்கைகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் பிறழ்ந்து போன நிலையில் எழுதப்படும் எழுத்து இது. கட்டற்ற பாலியல், குற்றகரமான அறமீறல்கள் என அனைத்து வகைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கியது. ஒரு வகையில் நோய்க்கூறானது. (பிறழ்வெழுத்து, ஜெயமோகன்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---transgressive fiction--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #