தொகை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொகை(பெ)
- மொத்தம்
- உருபு முதலியன மறைகை
- வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை,உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று அறுவகையாய் ஒரு சொன்னீர்மைப்பட்ட தொடர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- amount, sum, total
- (Gram.) omission, as of an inflectional sign in combination of words
- (Gram.) compound word of six kinds
விளக்கம்
- தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்).
பயன்பாடு
- உன்னிடம் எவ்வளவு தொகை உள்ளது?
- வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை என ஐந்து. இவற்றின் உருவுகள் மறைந்துவந்தால், வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை என்பர் இலக்கண நூலார் (மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 06 பிப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- ஈற்றுநின் றியலுந் தொகைவயிற்பிரிந்தே (தொல். சொல். 78, இளம்பூ.).
- எல்லாத் தொகையு மொருசொன்னடைய (தொல். சொல். 420)
ஆதாரங்கள் ---தொகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சொல்வளம்
[தொகு]