பேச்சு:whisky
தலைப்பைச் சேர்பழ.க, த*உழவன், செல்வா, whisky பதிகையைப் பாருங்கள். அதில் வருகின்ற தொடர்புடைய சொற்கள், மூல ஆவணம் போன்றவற்றிற்கும், woe பதிகையில் வரும் உசாத்துணை போன்றவற்றிற்கும், இயேசு பதிகையில் வருகின்ற மொழிபெயர்ப்புகள் போன்றவற்றிற்கும் வார்ப்புரு இருந்தால் நன்றாயிருக்காதா? பங்களிப்பாளர் பணி எளிதாகுமே! நன்றி!--George46 15:51, 1 ஜூன் 2010 (UTC)
- செய்யலாமே. அடிப்படைச் சொற்களுக்கு [[Wiktionary:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்]] (Wiktionary:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்) என்று இட்டாலே போதும். இவற்றுக்கு சுருக்கமாகச் சுட்டவும் மாற்றுப்பெயர் தரலாம். நமக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு ஆக்கிக்கொள்ளலாம். --செல்வா 16:43, 1 ஜூன் 2010 (UTC)
- {{விக்-அடி-சொல்}} என்னும் வார்ப்புருவை ஆக்கியுள்ளேன். வேண்டாம் எனில் நீக்கிவிடலாம்.--செல்வா 16:50, 1 ஜூன் 2010 (UTC)
தொடர்புடைய சொற்கள், மூல ஆவணம் போன்றவைகளை, இங்கு வந்த பொழுது(2008) பயன்படுத்தினேன். இரவியுடன் கலந்துரையாடிய பிறகு மூல ஆவணம் என்பதனை ஆதாரம் என்று மாற்றிக் கொண்டேன். தா, தரவு, ஆதரவு, ஆதாரம் என்ற வகையில் ஆதாரம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
உசாத்துணை என்பதனை, சுந்தர் தானியங்கி அதிகமாக பின்பற்றியது. உசா என்பது பெண் கடவுளையும் ஞாபகபடுத்துவதால், எனக்கு அச்சொல்லில் ஈடுபாடு இல்லை. இங்கு தமிழகத்தில் திருமண அழைப்பிதழ், சரக்குந்து போன்ற ஊர்திகளின் முன் முருகன்துணை, அய்யனார்துணை, மாரியம்மன்துணை ... என்று எழுதும் வழக்கம் இருக்கிறது.
எனவே, உயவுத்துணை என்பதனை கையாண்டேன். அச்சமயத்தில் இரவி எனக்கு எடுத்துரைத்த ஆதாரம் மிகவும் பிடித்து விட்டது. நுணுக்கமான சொல்லறிவு கொண்டவர் எதனையும் தவறாக புரிந்து கொள்ள மாட்டர். ஒரு சாதரண பயனரின் வருகையை ஒட்டியே இவ்வழியில் செயல்படுகிறேன்.
- ஒரு சொல்லுக்கு தொடர்புடைய சொற்கள் என்பதினையும், ஓரளவு தொடர்புடைய சொற்கள் என்பதனையும் இணைத்து சொற்களஞ்சியம் (thesaurus)போல இருக்கவேண்டும் என்றே சொல்வளம் என்ற வார்ப்புரு உருவாக்கப்பட்டது. அதனை
{{சொல்வளம்|1|2|3}} இப்படி இட்டால், கீழ்கண்டவாறு வரும்.
இதில் 3 சொற்கள் மட்டுமே இட முடியும். வாழை போன்று ஒவ்வொரு சொல்லும் அதிக சொல்வளத்துடன் இருக்க எண்ணம். அதற்கு அதிக நேரம் ஆவதால் அம்முயற்சியை விட்டு விட்டேன்.{த*உழவன் 00:11, 2 ஜூன் 2010 (UTC)}
- ஆதாரம் என்பது (தா) தரவு என்பதில் இருந்து வருவதல்ல. அது சமசுக்கிருதச்சொல். சான்று, சான்றுகோள், அடிச்சான்று போன்றவை அதனினும் நன்றாக பொருள் உணர்த்திப் பிற தமிழ்ச்சொற்களோடு உறவு பூண்டு நிற்கும் சொற்கள். உசாவினான், உசாவுதல் என்பது வழக்கில் உள்ள சொல். எனக்குத் தெரிஞ்சவங்கக்கிட்ட உசாவிட்டு உங்களிடம் பேசுகிறேன் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். தேவநேயப்பாவாணரும் உசாவுதல் பற்றி எழுதியிருக்கின்றார். ஆதாரம் வழக்கில் உள்ள சொல்தான், அதனை எடுத்தும் ஆளலாம், ஆனால் அது தமிழ்ச்சொல் அல்ல, தமிழ்வழி பொருள் தராத சொல். சான்று என்னும் சொல் சான்றாண்மை, அடிச்சான்று,, சான்றுக்கூறு, சான்றுநூல் , சான்றோர் போன்ற பல சொற்கள் இயல்பாக உருவாக துணை செய்வது. இச்சொற்களுக்கு வலுவூட்டியும் நிற்கும். தமிழர்களே தமிழ்ச்சொற்களை ஒதுக்கினால், யார் பின் தமிழ்ச்சொற்களை ஆள்வர். அடிப்படையாக வார்ப்புருக்களில் பயன்படும் சொற்கள் தமிழ்-வழி தெளிவாகப் பொருள்விளங்கும் தமிழ்ச்சொற்களாக இருப்பது நல்லது. --செல்வா 13:34, 2 ஜூன் 2010 (UTC)
- ஆதாரம் என்பது (தா) தரவு என்பதில் இருந்து வருவதாகக் கூறவில்லை. அது பல சொற்களை அடக்கியுள்ளதாக நினைக்கிறேன். புதிதாக தமிழ் கற்பவர் ஒரு சொல்லில் பல சொல்லைக் கண்டார் மகிழ்வர் என்ற அர்த் த த்தில் கூறினேன்.
- நல்ல ஆழமான கருத்துக்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி. உசாத்துணை த.வி.கட்டுரைகளுக்கு பொருந்தும். இங்கு பயன்படுத்த எனக்கு மனம் ஒப்பவில்லை. எது தமிழ்ச்சொல் , சமசுகிருதச்சொல் என்பது பற்றி பவுல் எடுத்துக்கூறினார். தமிழ் பேரறிஞரிடையே அது பற்றிய மயக்க நிலை உள்ளது. நான் ஒரு தமிழ் ஆர்வலன் அவ்வளவே. இது பற்றி பவுல் (14 தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்) நான் முழுமையாக ஏற்கிறேன். சான்றோர் என்பதிலிருந்து சான்றுகோள் என்பது சிறப்பாகத் தான் படுகிறது. சான்றுகோல் என்று தவறாக பலர் பயன்படுத்தவரோ? (பனம் பணம் அணுக்கம் அனுக்கம், வனக்கம் வணக்கம் இது போல எழுத்துப்பிழைகள் அதிகரித்து வரும் நாளில் ..) சான்று என்று எழுதினால் தவறா?
கீழே உள்ள தயவுசெய்து தகவல் ஆதாரங்களைத் தரவும். என்பதில் எது உள்ளதோ அதனையே தருவது பங்களிப்பாளர்களுக்கும் உதவியாக இருக்கும். சான்றுகளைத் தரவும் என்று சுருக்கமாக கீழேயும் மாற்றலாமா? அச்சமயத்தில் அண்மையப் பக்கங்களிலும் உள்ள, எழுத்துப்பிழையை பழ.கந்தசாமிசுட்டிய படி மாற்றவேண்டும். அதை எப்படி செய்வது?
கீழே மாற்றத வரை, மேலேயும் ஆதாரம் என்று இருக்கவே என்னுள் எண்ணம்.திண்ணம்.நன்றி வணக்கம்--த*உழவன் 12:24, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
- தகவலுழவன், விக்கியில்,தக்க காரணங்கள் தந்து உரையாடுவது முறை. நீங்கள் எனக்கு மனம் ஒப்பவில்லை, என்னுள் எண்ணம்.திண்ணம் என்றெல்லாம் கூறினால் என்ன செய்ய முடியும்? வேறு யாரேனும் எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வீர்களோ என்னவோ?! நீங்கள் உங்களை ஒரு தமிழ் ஆர்வலன் அவ்வளவே என்று கூறிக்கொள்ளும்பொழுது, தெரிந்தவர்கள், தக்க காரணங்களுடனும், ஏரணங்களுடனும் சொன்னால் பின் ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்?!!--செல்வா 13:01, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
Start a discussion about whisky
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve whisky.