உள்ளடக்கத்துக்குச் செல்

ஒருக்கணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒருக்கணி(வி)

  1. ஒருக்களி; ஒருபக்கமாய்ச் சாய்; பக்கவாட்டில் சாய்
  2. ஒருச்சரி; சற்றுக் கோணலாக/சாய்த்து வை; கொஞ்சம் திற
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. lie on one side
  2. set slantingly; put sidewise; leave ajar, as a door
விளக்கம்
  • ஒரு + கண்
பயன்பாடு
  • கதவை ஒருக்கணி
  • ஆடு-மாடுகளை ஒருக்கணித்து படுக்க வைத்து அறுக்க வேண்டும்(ஈகரை)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒருக்கணித்தோ மல்லாந்தோ கண்வளர்ந்தருளுகிறது (திவ். திருமாலை, 23, வ்யா. 81)
  • ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை
ஒருக்கணித்து மார்பணைத்து மேனி யெல்லாம்
கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவி (பாண்டியன் பரிசு, பாரதிதாசன் )
  • சற்றே விலகித் தரையினிலே கையூன்றி
மற்றுமிரு வாழைத் துடைகள் ஒருக்கணித்து
மின்னொளியும் உட்கார்ந்தாள் மேலாடைதான் திருத்தி! (பாரதிதாசன் )
ஒருக்களி - ஒருச்சரி - சாய் - # - # - # - #

ஆதாரங்கள் ---ஒருக்கணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருக்கணி&oldid=931310" இலிருந்து மீள்விக்கப்பட்டது