உள்ளடக்கத்துக்குச் செல்

தரளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தரளம், பெயர்ச்சொல்.

  1. உருட்சி
  2. நடுக்கம்
  3. முத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pearl
  2. globularity
  3. tremulousness, quaking
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் – நீயா? (திரைப்பாடல்)
  • வாரித்தரள நகைசெய்து (சிலப். 7, 38).
  • கணவன் வரக் கண்டு -
கவறாட்டத்தை விட்டெழுந்த -
பானுமதியின் மேகலையைப்
பற்றிக் கர்ணன் இழுக்கையில்...
தரையில் சிதறிய
தரளங்களை -
'எடுக்கவோ? கோக்கவோ?’
என்றானே துரியோதனன்... (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 15-ஜூன் -2011)
  • தத்தும் கரட விகடதட
தத்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
தரளம் தனக்கு விலையுண்டு (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், பகழிக்கூத்தர்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
முத்து - சிப்பி - முத்துச்சிப்பி - திரட்சி - தாராளம் - திரளம் - #


( மொழிகள் )

சான்றுகள் ---தரளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தரளம்&oldid=1979885" இலிருந்து மீள்விக்கப்பட்டது