துடக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துடக்கு(பெ)

  1. மாதவிடாய் விலக்கம்
  2. பந்துக்களின் பிறப்பு, இறப்பு இவற்றால் நிகழும் தீட்டு
  3. சாவுநிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத்தொடுதல், தீண்டத்தகாதவரை நெருங்குதல் முதலிய அசுபச்செய்கைகளால் நிகழும் தீட்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • uncleanness, ceremonial impurity of child birth; catamenia, death etc.
  1. uncleanness, ceremonial impurity of a woman from menstruation
  2. ceremonial uncleanness from birth or death among relations
  3. ceremonial pollution, due to miscarriage, touching a corpse or carcass, touching one of low caste or entering a mourning house, etc.;
விளக்கம்
பயன்பாடு
  • துடக்கு கழி - தீட்டு கழி - to dispel ceremonial uncleanness
  • துடக்குக்காரி - தீட்டுடைய பெண் - a woman in her menses or right after child birth
  • துடக்குக்காரர் - தீட்டுடையவர் - persons ceremonially unclean by a birth, death
  • துடக்குவீடு - தீட்டுவீடு - a house ceremonially unclean
  • எங்கள் வீட்டில் பிள்ளை பிறந்த அடுத்த நாள் மணிக்கூடு போய்விடும். மூன்றாவது நாள் இரும்புக் கட்டிலை மடித்து மாட்டுக்கொட்டிலுக்குள் ஐயா வைப்பார். அம்மா எழும்பி மெள்ள மெள்ள வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பார். 31ம் நாள் துடக்கு கழிப்பார்கள். (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துடக்கு(பெ)

  1. தன்னகப்படுத்துவது, சிக்கவைப்பது
  2. சம்பந்தம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which entangles, entanglement, binding
  2. connection, concern
விளக்கம்
பயன்பாடு
  • துடக்குகள் தீர்த்துப்போட்டான் - He has cut off all the connections.

(இலக்கியப் பயன்பாடு)

  • தூண்டிலிரையிற் றுடக்குள் ளுறுத்து (பெருங். உஞ்சைக். 35, 108).

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துடக்கு(வி)

  1. ஆரம்பி, தொடக்கு
  2. கட்டு
  3. அகப்படுத்து
  4. சம்பந்தப்படுத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. begin
  2. tie, bind
  3. entangle, inveigle
  4. bring together
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நெடுங்கொடி யருவியாம்ப லகலடை துடக்கி (அகநா. 96)
  • தூண்டிலாவிட்டுத்துடக்கி (கலித். 85).
  • குடரோடு துடக்கிமுடக்கியிட (தேவா. 945, 1)

ஆதாரங்கள் ---துடக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சூதகம் - தீட்டு - அசூசகம் - தொடக்கு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=துடக்கு&oldid=1994256" இலிருந்து மீள்விக்கப்பட்டது