செந்தேள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

செந்தேள்:
(கோப்பு)

பொருள்[தொகு]

  • செந்தேள், பெயர்ச்சொல்.
  1. சிவப்பு நிறமுள்ள ஒரு நச்சு உயிரினம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. indian red scorpion

விளக்கம்[தொகு]

  • நஞ்சு உள்ள தேள் இனத்தில் செந்நிறமானவை செந்தேள் ஆகும்... செந்தேள் கொட்டினால் பாதிக்கப்பட்ட இடம் முழுவதும் உடனே நீல நிறமாக மாறிவிடும்...பொறுக்கமுடியாத கடுப்பு, வலியையுண்டாக்கும்...சில நேரங்களில் மனிதனின் உயிரையும் போக்கவல்லது...வலியால் மயக்கமடைவதற்குமுன்னரே முதலுதவி/மருத்துவ உதவி தரப்படவேண்டும்...உலகிலுள்ள தேளினங் களில் உயிர்போக்கும் நஞ்சுள்ள தேளின் வகைகளில் செந்தேள் ஒன்று... இந்தியா, கிழக்கு பாகிஸ்தான், நேப்பாளம், இலங்கை ஆகிய நாடுகளில் செந்தேள் காணப்படுகிறது...அடர் புதர், பாறைகள், கற்கள், கருமண் பிரதேசம் ஆகியவைகளுக்கிடையே வாழ்ந்துக்கொண்டு, இரவு நேரத்தில் சிறு பல்லி, வண்டு, பூச்சிகளை வேட்டையாடி உணவாக்கிக்கொள்ளும்...சில சமயங் களில் மனிதர்கள் வாழுமிடங்களுக்கருகிலும், வீட்டுக்கூரை, சுவரோட்டை, இடுக்குகளிலும் குடிக்கொண்டிருக்கும்... ஒரு முறை தேள் கொட்டியோருக்கு வாழ்நாள் முழுவதும் இருதய அடைப்பு வருவது மிக மிக குறைவு என்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=செந்தேள்&oldid=1470540" இலிருந்து மீள்விக்கப்பட்டது