நிறம்
பொருள்
நிறம் (பெயர்ச்சொல்)
- கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெறிக்கும்போது அல்லது எதிரும்போது சில ஒளியலைகள் வெளிப்படுகின்ற. இவை கண்ணில் படும்பொழுது ஒளியின் அடர்த்தி அல்லது அளவு அல்லாமல், அதன் பிறிதொரு தன்மை அல்லது பண்பு என்பது நிறம் ஆகும். சிவப்பு, பச்சை, நீலம் முதலானவை வெவ்வேறு நிறங்கள். சிவப்பு, பச்சை, நீலம் முதலானவை ஒளியலையின் அதிர்வெண் அல்லது அலைநீள மாறுபாட்டால் வேறு வேறு தன்மைகள் உடையனவாகக் கண்கள் உணர்கின்றன. பறவைகள், பட்டாம்பூச்சிகள் போன்ற பல உயிரினங்கள் மாந்தர்களால் காணமுடியாத நிறாங்களைக் காணவல்லன.
- ஏதொன்றிலும் வேறுபாடு அல்லது வகைகள் (இவை ஓளியோடு தொடர்பில்லா, வகைப்பாடு). வெவ்வேறு தன்மை, பண்பு.
- சாயம் (துணி முதலானவற்றில் ஏற்றும் பண்பு)
- இசை, இசைப்பண்புகளில் வேறுபாடு; பண்களில் வேறுபாடு.
- ஒளி
- இயல்பு, தன்மை
விளக்கம்
- (இலக்கிய மேற்கோள்) - நிறம் விட்டுக்காட்டாது மிக வழுத்தம் (பஞ்ச. திருமுக. 1157).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
கண்ணால் உணரும் ஒளியின் பண்பு
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |